பக்கம்:நாகப்பட்டினம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 259

மணமகன் பெற்றமை

இக்கோயிலுக்குரிய புராணக்கதை இது: ஆதிசேடன் வாகிக்குப் பெற்ற கன்னியர் நால்வர். மணமகன் களை நாடி நாகூர் வந்து அங்கிருந்த வளாகத்தில் புன்னாக மரம் வளர்த்து அருவுருவம் அமைத்து வழிபட்டுச் சிவனருளால் மணம் பெற்றனர். இங்கெழுந்த கோயிலே இது. -

10. குமரன் கோயில்

குமரன் கோயில் நாகையில் முருகனுக்கென்று அமைந்த தனிப்பெருங்கோயில் ஆகும். ஒல்லாந்தர் ஆட்சியின் அடாவடியால் இக்கோயில் உருவாகியது. 17ஆம் நூற்றாண்டில் உருவான பிற்காலக் கோயில் இது. *

நகரின் தென்மேற்கு மூலையில்பழை சிந்தாறு (விருத்தகாவிரி) ஒடிக் கிழக்கே திரும்பிய கரையில் இருந்த கார்முகேசர் கோயிலை ஒல்லாந்தர் அப்புறப்படுத்தினர். அதிலிருந்த திருமுருகனைப் போற்றி எழுப்பப்பட்ட கோயிலே "நாகைக் குமரன் கோட்டம்" எனப் பெறும். குமரகோயிலில் இக்குமரன் "மெய்கண்ட வேலவன்" எனப் படுவான். தந்தைக்கு மெய்ப்பொருளைக் குறித்தமையால் இப்பெயர் பெற்றான். -

கார்முகேசர் கோயிலிலிருந்த முருகன் திருவுருவத்தைப் பேணிய நகரத்தார் ஏனையர் துணையுடன் இக்கோயிலை எழுப் பினர். "இக்கோயில் நாகை நீலா தெற்கு வீதியில் இருந்த கா. அண்ணாமலை தேசிகர் என்பவரால் கட்டப்பெற்றதாகத் தெரிகிறது" என்பர். (18)

உயர்ந்த தெருக்கள் -

இக்கோயில் நீலா தெற்குத் தெருவின் நடுவில் வடக்குச் சிறகத்தில் எழுப்பப்பெற்றுள்ளது. இதனை அடுத்து வடகிழக்கில் கட்டியப்பர் (அமுதகடேசர்) கோயில் உள்ளது.

கோயிலின் முன் வெளியில் ஒரு நாற்கால் மண்டபம் ஊஞ்சல் மண்டபமாக உள்ளது. இதன் நடுவிடம் பள்ளமாக இருப்பதுகொண்டு நாகைத் தெரு எவ்வளவு உயர்த்தப்பெற்றுள்ளது என்பதை உணரலாம். பெரும் மதிற்கூவரையுடைய இக்கோயில் கிழக்கில் மூன்று மாடக் கோபுரத்தையும், தெற்கில் அரச கோபுர வாயிலையும் கொண்டது. தெற்கு மதிற்கூவரின் மேல், புராணச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/277&oldid=585158" இலிருந்து மீள்விக்கப்பட்டது