பக்கம்:நாகப்பட்டினம்.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

261

11. நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் நாகையில் குறிப்பிட வேண்டிய கோயில்களில் நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயிலும் ஒன்று. பொதுமக்களால் நாளும் வணங்கப்படும் கோயில் இது. கண்ணகியம்மன்

அகநகரில் பெருமாள் கீழைத்தெருவில் தெருவை ஒட்டிக் கிழக்கு முகமாக அமைந்துள்ளது. மாரியம்மன் மூலவர். மாரியம்மன் என்பது ஒரு மாற்று ஆக்கக் கடவுள். கண்ணகியார் மாரி பெய்வித்து வெப்பக் கொப்புளத்தை அடக்கியமையால் "மாரியாத்தா" எனப் பட்டார். அவர்க்கெனத் தோன்றிய தொன்மைக் கோயில்கள் மாரி யம்மன் கோயில்களாயின. இலங்கையில் இதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன. . -

இலங்கை நயினாத் தீவில் உள்ள நாகபூசணி அம்மன் கோயில் திருத்தேரில் ஒரு மாரியம்மன் மரச்சிற்பம் உள்ளது. அதன் ஏந்திய வலக்கையில் சிலம்பு உள்ளது. (இதனை யான் கண்டதுண்டு). மாரி யம்மனாக மட்டுமன்றி மரியன்னை கோயிலாகவும் மாற்றப் பட்டுள்ளது. இலங்கையில் மடுவில் என்னும் ஊரிலுள்ள கிறிஸ்துவ மரியன்னை கோயிலுக்குத் தமிழ்ச் சமயத்தவர் பலரும் பத்தினியம்மன் கோவிலுக்குச் செல்வதாகவே சொல்லிச் செல். கின்றனர். இஃது அவ்வாறு மாற்றம் பெற்றது என்பதை ஓர் ஐரோப்பிய அறிஞர் ஆய்ந்து வெளிப்படுத்தியுள்ளார்.

இவ்வாறு மாற்றமின்றி இயல்பாகவும் மாரியம்மன் கோயில்கள் பின்னர் எழுந்தன. நாகையில் மாரியம்மன் மேல் நீங்கா அன்புகொண்ட திருமதி பெரிய நாயகியம்மாள் என்பார் சிறிய அளவில் கோயில் அமைத்தார். அஃதே பின்னர் மக்களால் - நெல்லுக்கடை வணிகர்களால் - பெருக்கப் பெற்று இன்றைய நிலையில் உள்ளது; நெல்லுக்கடை மாரியம்மன் என்னும் பெயரும் பெற்றது. -

இக்கோயிலில் மூலவர் மாரியம்மன். சிவனாரின் அருவுருவத் திருமுன்னும் உள்ளது. மேலும் வலச்சுற்றில் எல்லையம்மன், ஐயனார். திருமுருகன் உள்ளனர். கூத்தரசர், பிள்ளையார், முருகன் முதலியவர் திருவுருவங்களும் நிறுவப் பெற்ற இஃது ஒரு சிவன் கோயிலாகவே திகழ்கிறது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/279&oldid=585160" இலிருந்து மீள்விக்கப்பட்டது