பக்கம்:நாகப்பட்டினம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 நாகபட்டினம்

வேண்டும் - என்று வேண்டினாள். தான் வர இயலாதவள் என்பதையும் குறிப்பாக உணர்த்தினாள்.

பீலிவளை - நெடுமுடிக்கிள்ளி தொடர்புச் செய்தி இலைமறை காயாகப் பலராலும் அறியப்பட்ட செய்தியாகையால், அதனை அறிந்திருந்த எம் தலைவரும் மிக மகிழச்சியுடன் இசைந்தார். வணங்கி, பேழையுடன் குழந்தையைப் பெற்றுக் கொண்டார்.

சோழ நாட்டு அரசிளங்குமரனுடன் வந்த எம் மரக்கலம் சோழநாட்டுக் கடற்கரையை அடைய ஒரு நாழிகைப் பயணம் இருந்தது. திடீரென்று பெரும் காற்றும், கடற்கொந்தளிப்பும் எழுந்தன. மரக்கலத்தைப் பலவகையிலும் கரைசேர்க்க முயன்றோம். முயற்சிகள் பயனற்றுப் போயின. நடுயாம இருளில் கலம் கவிழ்ந்தது. அந்நேரத்திலும் எம் தலைவர் பேழையைப் பிடித்த வாறே நின்றார். நான் அலைகளால் மோதுண்டு இங்கு கரையில் தள்ளப்பட்டேன். கரைக்குப் பக்கத்திலேயே இது நேர்ந்ததால் பலரும் பிழைத்திருக்கலாம். குழந்தை இருந்த பேழையும் மிதக்கும் அமைப்புடையது. குழந்தை என்ன ஆயிற்றோ? எம் தலைவர் சோழப் பெருமன்னரை எவ்வாறு காண்பாரோ? இப்பழிக்கு அஞ்சி என்ன ஆனாரோ அறியேன் - என்று கூறி முடித்தான்.

விடிந்தது. கடற் கொந்தளிப்பும் காற்றும் குறைந்து வந்தன. அந்தச் சூழலிலும் சோழநாட்டு வீரர் கடற்கரையெல்லாம் தேடி அலைந்தார்கள், கம்பளச் செட்டியார் உயிர் பிழைத்துக் கரை சேர்ந்து விட்டார். ஆனால், குழந்தை இருந்த பேழை கடலில் விழுந்தது. இச்செய்தியை மன்னர்பால் கூறியுள்ளார். மன்னன் உள்ளத்திலும் கொந்தளிப்பும் புயலும் புகுந்தன. அயர்ந்து சோர்ந் தான். விரைந்து தேடச் செய்தான். முடிவு குழந்தை இறந்திருக்க வேண்டும் என்பதாயிற்று.

1. "..................... பீலி வளைதான் பயந்த

புனிற்றிளங் குழவியைத் தீவகம் பொருந்தித் தனிக்கலக் கம்பளச் செட்டிகைத் தரலும்"

-- ഥങ്ങിGഥങ്കങ്ങബ് 29-5-7 2. "இலங்கு நீர் அடைகரை அக்கலம் கெட்டது" - மணி 25:19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/28&oldid=584910" இலிருந்து மீள்விக்கப்பட்டது