பக்கம்:நாகப்பட்டினம்.pdf/280

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 X

நாள்தோறும் மக்கள் வழிபடுவதுடன் ஞாயிறு தோறும் மிகு எண்ணிக்கையில் வழிபாடு செய்கின்றனர். வழிபடுவோர் கூட்டத்தில் ஒரிரு பிற சமயத்தாரையும் காணலாம்.

புதுமையாக நெல்விளக்குப் படைப்பர். பலவகைக் காவடிகள் எடுப்பர். . . § வானில் ஒரு சுற்று .

ஆண்டுதோறும் சித்திரைத் திங்களில் பெருவிழா நிகழும், பத்தாம் நாள் திருத்தேரோட்டம் உண்டு. அன்று இங்குப் பொது மக்களின் வேண்டுதலாக நிகழும் செடில் நிகழ்ச்சி இக்கோயிலின் புகழ் பெற்ற காணிக்கை வழிபாடாகும்.

கோயிலின் திருமுன்னர் கழுமரமாக உயர்ந்த தூண் நிறுத்தி அதில் ஏற்றி இறக்குமாறு ஒரு கணையமரம் பொருத்துவர். ஒரு முனையில் செடிலின் மேல் களம் பக்கத்தில் சட்டம் உயர்த்தி மேல் விமானம் குடையமைத்த அமைப்பு ஒன்று இருக்கும். அதில் ஒரு பூசாரி காத்தவராயன் வடிவம் பூண்டு வேண்டுதல் செய்யப்பட்ட குழந்தையை ஏந்திக்கொள்ள, செடில் களத்தை மறு பக்கத்தால் உயர்த்தி உயரத்திலிருந்தவாறு ஒரு சுற்றுச் சுற்றுவர். குழந்தைகளே ஏற்றப் பெறுவர். இதற்குக் கட்டணம் கட்டிச் சீட்டை முன்கூட்டியே பெற வேண்டும். இரவு தொடக்கமாகச் சுற்றத் தொடங்கிக் காலை வரை - சில ஆண்டுகளில் மறு இரவிலும் - இது நிகழும். குழந் தைக்கு நேரும் தீங்குகளைப் போக்கிக்கொள்ளவேண்டி இவ்வாறு செடிலில் ஏற்றுவர். சீட்டைக் கொடுத்து ஏறிய குழந்தை வானில் ஒரு சுற்று வரும். - - -

இதற்கொரு காத்தவராயன் கதை உண்டு. ஆரியமாலாவைச் சிறையெடுத்ததாகக் காத்தவராயன் கழுவேற்றப்பட்டான். அவன் பாங்கில் இச்செடில் அமைக்கப்பெற்றது.

பெரும்பகுதி குழந்தை நலங்கருதியும், நோய் தீர்க்கவேண்டியும், குடும்ப நலன்கள் வேண்டியும், கழுவாய்க்கும் பலவகை வேண்டுதல் களை மக்கள் செய்து கொள்வர். சிறு மண்பொம்மைகள். தேங் காய்கள், மிளகு, உப்பு முதலியவற்றைக் காணிக்கையாகச் செலுத் துவர். *

இக்கோயில் ஒரு மரபுவழியான குடும்பத்தாரின் அறப் பார்வையின் கீழ் நடைபெறுகிறது. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/280&oldid=585161" இலிருந்து மீள்விக்கப்பட்டது