பக்கம்:நாகப்பட்டினம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை - 265

"மக்கள் படும் துன்பங்களைப் பார்த்துப் பொறாமல் அழுந்தியவர்" என்றும் கூறினர். இவர்களைப் பாக வதம் திராவிடராக "த்ரமிடேஷசபூரிய" என்று சுக முனிவர் வாயி லாகக் கூறியது. ஆழ்வார்களில் நம்மாழ்வார் முதல்வர். திருமாலியத் தாராலும், ஏனை ஆழ்வார்களாலும் முடிமேல் சூடிப் போற்றப்படு கிறவர். இவரை "வைணவை குலபதி" என்பர். சொற்சுவை துளும்பும் பாவிசைகள்

ஆழ்வார்கள் பாடிய பாவிசைகள் நாலாயிரமாகும். இவற்றை "நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்" என்பர். பின் எழுந்த இராமாநுசர் பாடிய நூற்றந்தாதியும் இவற்றுடன் சேர்த்துப் போற்றப்படும் சிறப் புடையது. இவை திருமாலியத்தின் கருவூலங்கள்; ரான்மறையின் வடிப்புகள் என்பர். சைவத்திற்குத் தேவாரமும். திருவாசகமும் போன்று திருமாலியத்திற்கு இவை நாடித்துடிப்பானவை. நேரே உரையாடுவது போன்ற சொல்லோட்டமும், சுவைச் சொல்லாட்சியும், நயமான வண்ணனைகளும், புதிய சொல்லாக்கங்களும் இவற்றிற் கெல்லாம் இழையோட்டமாக ஒதப்படும் இசையினிமையும் ஆழ்வார் மொழிகளின் இயல்பு மூச்சுகள். இவை படிப்போரை வயப்படுத்தி, ஒது வோரை உள்ளடக்கிக் கேட்போரைக் குளிர்விப்பவை. ஒன்றே ஒன்று

நாலாயிரத்துள் அதிகமாகப் பாடியவர் நம்மாழ்வார். 1296 பாவிசைகள் இவர் பாடியவை. அடுத்து அதிகம் பாடியவர் திருமங்கையாழ்வார். இவர் பாவிசைகள் 1253.

ஆழ்வார்களால் பாவிசை பெற்ற திருமாலியத் திருநகர்கள் 108. வடபுலத்து 12 திருநகர்கள். அல்லாமல் மற்றவை தமிழ் நாட்டவை. 108 இல் சோழநாட்டுத் திருநகர்கள் 40; கடற்கரைத் திருநகர்கள் 7: ஏழுள் நாகை ஒன்று. 108 திருநகர்களில் திருமங்கையாழ்வார் 88 நகர்களைப் பாடியுள்ளார். அதிகம் திருநகர் பாடியவர் இவரே. நம்மாழ்வார் 86 நகர்களைப் பாடியுள்ளார்.

நாகையைத் திருமங்கையாழ்வார் ஒருவரே பத்துப் பாக்களால் பாடினார். • , -

நாகை நகரில் ஆறு திருமாலியக் கோயில்கள் உள்ளன. ஏழாவதும் இருந்தது. அவற்றுள், -

அருள்திரு செளந்தர்யராசப் பெருமாள் கோயில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/283&oldid=585164" இலிருந்து மீள்விக்கப்பட்டது