பக்கம்:நாகப்பட்டினம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 - நாகபட்டினம்

அருள்திரு நவநீதக் கிருச்ணசாமி,கோயில்: அருள்திரு வரதராசப் பெருமாள்கோயில் (வெளிவை) என்னும் மூன்றும் மூலவர் கோயில்கள்.

சந்நிதி ஆஞ்சநேயர் கோயில், இரண்டு மாத்துவ ஆஞ்சநேயர் கோயில்கள், அருள்மிகு வேதாந்த தேசிகர் கோயில் என்பவை திருமாலிய அணுக்கத் தெய்வக் கோயில்கள். எல்லாம் அழகு

செளந்தர்யராசப் பெருமாள் கோயில் என்று வழங்கப்படும் அழகரசப் பெருமாள் கோயில் பெரியது. நிறைவான அமைப்புக் களைக் கொண்டது. அம்மையின் பெயர் செளந்தர்யவல்லி எனப் பெறும் அழகுக்கொடியாள்.

இது பெரிய திருமாலியக் கோயில், நான்கு சுற்று விதிகளைக் கொண்டது. எழுநிலை மாடமாக உயர்ந்த அரச கோபுரம் 90 அடி உயரமுள்ளது. நாகைக் கோயில்களில் இஃதே மிக உயரமானது. உரிய மண்டபங்களைக் கொண்டது. சோழர், பல்லவர், மராத்தியர் திருப்பணிகள் செய்துள்ளனர். மராத்திய மன்னர் ஒருவர் வைரமாலை பூட்டினார். கருவறை விமானம் அழகிய விமானம் , எனப்பெறும். திருக்குளம் கொண்டது.

கருவறையில் மூலவர் திருவுருவம் நின்ற திருக்கோலத்தில் 10 அடி உயரமுள்ளது. அம்மன் திருமுன் அழகியது. வைகுந்தநாதர், . சிரீநிவாசப்பெருமாள். இராமர், ஆண்டாள், கருடாழ்வார் திருப்படி மங்கள் தனித்தனியே உள்ளன. தென்கலைச் சான்றோர் மணவாள மாமுனிகள் திருவுருவம் உள்ளது. அரங்கர் திருமுன் இருபுறமும் கூப்பிய கைகளுடன் இருவர் நிற்கின்றனர். இவர்கள் கண்டன், சுகண்டன் எனும் உடன்பிறப்பினர் என்பர். இக்கோயில் ஒரு தனிச் சிறப்பைக் கொண்டது. திருமாலின் திருக்கோலத்தை, கிடந்த திருக்கோலம் இருந்த (அமர்ந்த திருக்கோலம், நின்ற திருக் கோலம் என்பர். இம்மூன்று படிமங்களும் இந்நிலைகளில் உள்ளன. இவ்வாறு அருகிலே அமையும். கிடந்த (படுத்த) திருக் கோலம் தோளில் தலை சாய்த்துள்ளது 'புசங்க சயனம் ஆகும்.

வழிபட்டுப் பேறு பெற்றார் நான்கு ஊழிகளிலும் முறையே ஆதிசேடன், நிலமகள், மார்க்கண்டர், சாலிசுகன் என்பர். சாலிசுகன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/284&oldid=585165" இலிருந்து மீள்விக்கப்பட்டது