பக்கம்:நாகப்பட்டினம்.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 269

படுகிறது. "அருள்பிரகாசவள்ளலார் மன்றம்" என்றொன்றை இதில் அமைத்து அருட்டாக் கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். சித்த மருத்துவரும் ஒய்வுபெற்ற தமிழாசிரியருமாகிய புலவர் இர. இராம தாசு (அந்தணப்பேட்டை) அவர்களும் நாகை திரு. ச. துரையரசன் அவர்களும் ஏனைய நல்லன்பர்களும் ஈடுபாட்டுடன் உலக சமரச சன்மார்க்க மையக்கிளை என்றமைத்து இயக்கி வருகின்றனர். கோயில், குளம் தொகை

இதுவரை நாகையில் தமிழர் சமயங்களையும், அவற்றின் கோயில்களையும், கடவுளர்களையும் வழிபாடுகளையும், பயன்களையும் கண்டோம். இச்சமயக் கோயில்களாக,

சிவன் கோயில்கள் 15 திருமாலியக் கோயில்கள் 6 (+1) பிள்ளையார் கோயில்கள் 26

சிறுதெய்வக் கோயில்கள் 20 - - என 69 கோயில்கள் நாகையில் உள்ளன. நீராடிப் பேறு பெறும் சிறப்பாக உள்ள திருக்குளங்கள் 12 உள்ளன. அவை தீர்த்தம் என்னும் வட சொல்லமைப்புடன் உள்ளன.

<34& XSLI: (1) தேவதீர்த்தம் (காரோணர் கோயிலுக்குள் முத்தி மண்டபத் துடன் உள்ளது). (2) சாறுவ தீர்த்தம் (அம்மை திருமுன் தென் மேற்கில் உள்ளது), (3) காசு தீர்த்தம் (புண்டர்குளம்), (4) பிரம தீர்த்தம் (நடுவர் கோயில் பின்), (5) அமுதபுட்கரணி (அழகர் கோயில் பின்), (6) சாரதி புட்கரணி (அழகர் கோயில் தெற்கு), (7) சாரபுட் கரணி (பெருமாள் கோயில் பின்), பாதாளக் கங்கை (மாமுனித் தீர்த்தம்), (9) துரிய தீர்த்தம், {10} சந்திர தீர்த்த்ம், (11) நித்தகங்கை, (12) சமுத்திர தீர்த்தம் (கடல்).

சமயத் துறையில் இவை யாவும் பெருமையாய்ப் பேசப்படு பவை. புராணத் துறையில் பல பேறுகளைப் பெற்றவர்களையும், பெற வேண்டுபவர்களையும் அறிமுகம் செய்வன

நாகை நகரில் மேலே கண்டவை நிற்க, புறப்புறச் சமயங் களாகிய இசுலாமியம் கிறித்துவம் ஆகிய இரண்டும் புகுந்து நிலைபெற்றுள்ளன. இவ்விரண்டும் ஓரளவில் பெரும்பகுதி மக்களைக் கொண்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/287&oldid=585168" இலிருந்து மீள்விக்கப்பட்டது