பக்கம்:நாகப்பட்டினம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 11

அன்று பீலிவளை பிரிந்தபோது புத்தச் சாரணர் கூறிய சொற்கள் அவன் நினைவில் அவனை ஊசலாட்டின. "புதல்வன் வரூஉம் அல்லது பூங்கொடி வாராள்" என்றதைவிட வந்த புதல்வனும் வாரிக்கொள்ள பட்டானே என்று கவன்றான். வேறு நினைவற்றவ னானான். நே கடற்சொந்தளிப்பு புகார் நகரை மிகக் கடுமையாகத் தாக்கி iழம்பெரும் அந்தத் திருநகரம் கடலுக்குள் மூழ்கியது. இதனா. அவ்வாண்டு நிகழவிருந்த இந்திரவிழா நிகழாது போயிற்று. -

கடல் பொங்கியதால் :பக்கத்துக் கடலோரப் பகுதி ஒரு கி.மீ. அளவிற்கு மேல். கடலில் மூ கியது .

புகார் மக்களில் பி ை பலர் நிலப்பகுதிக்குள் ஓடினர். மன்னன் நெடுமுடிக்கிள் ரசியற் சுற்றமும் இன்றி ஒரு தனித்தவனாகப் புகார் விட்டுப் போயினான்; உறையூர் அடைந்தான்.

புகார் நகரத்திலிருந்து புத்த் துறவியரும் இங்கு வந் தடைந்தனர். நாற்புறப்பகுதிகளுக்கும் சிதறிய மக்களிற் பலர் இப்பகுதியை அடைந்து வாழ்த் தொடங்கினர். இப்பேரூர் நகராவ தற்கு இது அடிப்படையாயிற்று. கடற் கொந்தளிப்பில் காணாத நாகர் நாட்டுக் குழந்தைபற்றி நாளடைவில் புதுச் செய்திகள் முளைத்தன.

"மிதப்புப் பேழை ஒதுங்கியது. குழந்தையை உயிருடன் எடுத்து எவரோ வளர்த்து வருகின்றார்' என்று ஒரு பேச்சு.

"ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறு உம்

சான்றோரும் உண்" டன்றோ (4)

'அவ்வாறு வளர்ந்தது' என்று ஒரு கூற்று. அக்குழந்தை 'உயிருடன் இருந்தான் என்பது ஒர் உண்மை. அலை தந்த குழந்தை

அவ்ன் கடல் அலைகள் - திரைகள் தர வந்து உயிரும் கொண்டமையால் " திரை தர வந்தவன்" என்ற வழக்கால் "திரையன்" எனப் பெற்றான். இஃது ஒரு பேருண்மை.

1. "விரிதிரை வந்து வியன்நகர் விழுங்க ஒருதனி போயினன் உலக மன்னவன்"- மணி. 25:203.204.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/29&oldid=584911" இலிருந்து மீள்விக்கப்பட்டது