பக்கம்:நாகப்பட்டினம்.pdf/290

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நாகப

என்பதை முன்னரும் கண்டுள்ளோம். 'பள்ளிப்படை என்பதில் 'பள்ளி என்பது இறந்தோர் நிலத்துப் பள்ளி (துயில் படுக்கை) கொள்வதையும், படை' என்பது பள்ளி கொள்ள அமைக்கப்பட்ட இடத்தையும் குறிக்கும். இவ்வழக்கு பின்னர் அறவோர் தங்கும் இடத்தை - ஓய்வுகொள்ளப் பள்ளி கொள்ளும் இடத்தை - குறிக்க லாயிற்று. சமணத் துறவியர் தாம் ஒய்வு கொள்ளும் இடத்தையும், பயிலும் இடத்தையும் ஒன்றாகவே கொண்டு பள்ளி' என்றனர்.

திருச்சி மலைக்கோட்டையின் மேல் உள்ள முகட்டுப் பிள்ளை யார் கோயிலின் பின்புறத்தில் மலைக் குடைவான கூரையமைப் புண்டு. இதில் பல சமணத் துறவியர் தங்கிப் பயின்றனர். தத்தமக் கென ஒவ்வொரு பாறைப் படுக்கையையும் அமைத்துக் கொண் டனர். அங்கிருந்த சமணத் துறவியரின் தலைவர் பெயர் சிரா என்பது. ஒரு படுக்கையில் சிரா என்னும் பெயர் பொறிக்கப்பட்டுள் ளது. சிரா ஒய்வுகொண்ட பள்ளி சிராப்பள்ளி - திருச்சிராப்

பள்ளி என்று பெயர் கொண்டது. இன்றும் வழக்கில் உள்ளது.

பள்ளி என்னும் இச்சொல்லைப் புத்த சமயத்தாரும் கொண் டனர். நாகைச் சூடாமணி விகாரையில் இராசராசப் பெரும்பள்ளி, 'இராசேந்திரப் பெரும்பள்ளி என இருந்தவைகளை அறிந்தோம்.

இவைபோன்றே இசுலாமியர் தாம் தொழுகை செய்த திருவிடத்தைத் தமிழில் பள்ளிவாயில், பள்ளிவாசல் என்று வழங்குகின்றனர். . -

ஆனால், தமிழ் மண்ணின் சமயமாகிய சைவப்பள்ளி என்னும் சொல்லை வடமொழிப் படையெடுப்பால் சைவும் இழந்தது. திருமாலியமும் அவ்வாறே. வந்த வேற்று சமயத்தார் இந்நாட்டு வழக்கை இன்றும் கொண்டுள்ளமை நன்றிக்குரியது. நாகூரில் யாகூசன் பள்ளித்தெரு என்றொரு தெருப் பெயர் உள்ளது. கிறித்துவரும் சில சிற்றுார்களில் ஏசுப்பள்ளி என்கின்றனர்.

சமணரும் புத்தரும் பயிலும் இடத்தையும் 'பள்ளி' என்று கொண்டதால் இன்று கல்விக் கூடங்கள் பள்ளிக்கூடங்கள் எனப் பெறுகின்றன. -

இசுலாத்தில் சில பிரிவுகள் இருப்பினும் பொதுவில் அனை வரும் அல்லாவையே கடவுள் என்பர். முகம்மது நபியவர்களை அருளாளராகப் போற்றுவர். ஒத்த வழிபாடும், ஒன்றித்த சமயப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/290&oldid=585171" இலிருந்து மீள்விக்கப்பட்டது