பக்கம்:நாகப்பட்டினம்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

يتي

சமய நாகை 273

பிடிப்பும் சமய நம்பிக்கையும், கடமைப்பாடும் வேறுபடாமல் 2.5irgssos. வெள்ளிக்கிழமையைச் சிறப்பு நாளாகக் கொள்கின்றனர்.

இசுலாமியரை முகம்மதியர் என்று காணும் போது முகம்மது நபியவர்களின் ஆன்மீகக் கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதுடன் அவர்தம் நடை, உடை, பாங்கு, வாழ்வியல் எடுத்துக்காட்டு முதலிய வற்றையும் கைக்கொள்வதில் நாட்டம் உடையவராகத் தோன்றுவர்.

இசுலாமிய ஆண்டுக்கணக்கும் அவர் செயல் கொண்டே எழுந்து இன்றும் இசுலாமியர் வழக்கில் உள்ளது. அது இச்ரி (ஹிஜ்ரி) எனப்படும். நபியவர்கள் தெளர் என்னும் குகைக்குள் தனியே 3

நாள்கள் தங்கினார். நான்காவது நாள் அபூபக்கர் என்பார்

கூடினார். நான்காவது நாள் யதுரிப் நோக்கிப் பயணமானார். இந்நாளுக்குத்தான் இச்ரத் (ஹிஜ்ராத் - துறந்து செல்லல்) என்று பெயர். இதிலிருந்து கி.பி. 522 செப்டம்பர் முதல் இவ்வாண்டு தொடங்கியது. - . மரக்கலவரையர்

நாகையில் இசுலாமியர் சமயத் தொடர்பால் புகவில்லை. தொழில் தொடர்பால்தான் புகுந்தனர். மரக்கலம் செலுத்துவதில் வல்லவராக மேலைக் கடற்கரை வந்த அரபியர் கீழைக் கடற்கரையையும் அடைந்தனர். நாகையிலும் வடக்குப் பகுதியாம்

நாகூரிலும் மரக்கல அரையர் அலுவல் தலைவர் ஆக இடம்

பெற்றனர். அஃதாவது அரசர்க்கு மரக்கல அலுவல் தலைவராக அமர்த்தப்பட்டனர். அன்னார் இடம்பெற்ற நாகூர் பையப்பைய வணிகம் பெற்று மரக்கலச் செலவுகளால் சிறு துறைமுகமாக அமைந்தது. மரக்கலவரையர் குடும்பங்கள் வந்து அடைந்தன. இசுலாத்து வாழ்வியல் துவங்கியது. காலப்போக்கில் இசுலாமிய சமயப் பெரியோர் வந்தனர். இவ்விடத்துச் சமய மக்களில் பலரை முகம்மதியர் ஆக்கினர். அன்னார் முதலில் முகம்மதியரானவர் என்று குறிக்கப் பெற்றனர். இசுலாமியம் நிலை பெற்றது.

நிலை பெற்றாலும் அது பல்கிப் பெருகியமை ஓர் இசுலாமியத் துறவியார் வருகையாலும், அருளிப்பாட்டாலும், அடக்கத்தாலும் நேர்ந்தது. அவர்தாம் நாகூர் ஆண்டவர் என்று போற்றப்பெறும் அருள்திரு சையது அப்துல் காதிறு சாகூல் அமீது அவர்கள். அவர்தம்

தி 11,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/291&oldid=585172" இலிருந்து மீள்விக்கப்பட்டது