பக்கம்:நாகப்பட்டினம்.pdf/292

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 - . நாகபட்டினம்

வரலாற்றையும் அருளிப்பாட்டையும் அவர் அடக்கத்தையும், அவர் தொடர்பான விழாக்களையும், சற்று விரிவாக எழுத வேண்டியது கடமையாகின்றது.ஏன் எனில், நாகை - நாகூர் இசுலாமியக் களம் ஆனது, அவரால் அன்றோ அவர்தம் வரலாற்றுக்குரிய குறிப்புகள் கன்சூல் கறாமத்து என்னும் நூலிலிருந்து கொள்ளப் பெறுகின்றன. - - * -->

இப்பெரியார் வடபுலத்தில் இராமர் பிறந்ததாகச் சொல்லப் பெறும் அயோத்தி மாவட்டத்துக் கராணிக்கபூரில் செய்யது அசன் குத்தூசு என்பாருக்கும் செய்யிதுதத்துப் பாத்திமா அம்மையாருக்கும் மகனாக இச்ரி ஆண்டில் சமாத்துல் திங்களில் பத்தாம் நாளுக்கு நேரான கி.பி. 1490 நவம்பர் (கார்த்திகை) 25இல் பிறந்தார். தனியொரு அருள் உணர்வுடனும் செயலுடனும் வளர்ந்த அவருக்கு உரிய பருவத்தில் திருமண ஏற்பாடு செய்தனர். அதனை மறுத்து இல்லத்தை விட்டு வெளியேறினார். பாரசீகம், மக்கா, மதீனா முதலிய மேலை நாடுகளுக்குச் சென்று இந்திய மேலைக் கடற்கரை வழியாக வந்திறங்கி நம் நாட்டுக்குள் ஊடாடினார். தம் அருள் திறத்தால் பல அருளிப் பாடுகளைச் செய்தார். ஆங்காங்கு மாணவர் குழாம் பெருகியது. பின் பஞ்சாபில் அமைந்தபோது தம் அருளிப் பாட்டால் பிறந்த ஒர் ஆண்மகனைத் தம் பிள்ளையாக ஏற்று உடனுறைய வளர்த்தார். அம்மகனே பின்னர் இளம் ஆண்டவர் எனப்பெற்றவர். நாகூரில் அருளாளர் -

பின்னர் தெற்கே வந்து பொதியமலை சென்று அங்கிருந்து திருச்சி வந்து தஞ்சை வந்தார். அப்போது தஞ்சையை ஆண்ட அச்சுதப்ப நாயக்கர் (கி.பி. 1680-1700) பிணியால் வருந்தி யிருந்தார். அதனை நீக்க இவ்வடிகளாரை வேண்டியதற்கேற்ப அரண்மனை மாடியிலிருந்த புறா ஒன்றைக் கொணரச் செய்து அப்புறாவின் உடலில் பாய்ந்திருந்த ஊசிகளை எடுத்துக்காட்டி அரசன் குன்ம நோயைப் போக்கினார். நாயக்கரது காணிக்கையைப் பின்னர் பெறுவதாகக் கூறித் திருவாரூர் வழியாக நாகூரை அடைந் தார். அங்கும் மாணவரும் அடியாரும் பெருகவே அங்கேயே நிலை கொள்ள விரும்பினார். இதனையறிந்த அச்சுதப்ப நாயக்கர் அப் பகுதியில் இருந்த ஐவேலி நிலத்தில் ஒரு பகுதியை வழங்கி நிலைத்து உறைய ஏற்பாடு செய்தார்.நாகூருக்கு வந்தது கி.பி. 1530 ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/292&oldid=585173" இலிருந்து மீள்விக்கப்பட்டது