பக்கம்:நாகப்பட்டினம்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276 - நாகபட்டினம்

அவ்விடத்தில் அங்கு வாழ்ந்த மீனவர் தம் காணிக்கையாக முதலில் மரத்தால் தர்கா அமைத்தனர். பின் அஃது பெருகி வளம்பெற்று இப்போதைய மிளிரும் தர்கா வாகியது. இல் வடக்கந்தான் நாகூரை ஓர் இசுலாமியத் திருவிடமாக்கியது. நாகைக்கும் பெருமையை இணைத்தது. - நாகூர் ஆண்டவர் ஆண்டு நினைவு விழாவான கந்தூரி என்னும் திருவிழா அவர் இயற்கையெய்திய நாளில் தொடங்கி 10 நாள்கள் ஆண்டுதோறும் நிகழ்ந்து வருகின்றது. அடக்கமான திருவிடத்தில் ஒரு சுற்று மண்டபம் நாகைக் குஞ்சாயி மரக்கல வரையர் என்பவரால் கட்டப்பட்டது. இதுதான் புதுதர்கா அமைப் பிற்கு அடிகோலியதாகும். அதன்மேல் பெரும் குடை வடிவிலான கவிகை மண்டபம் கட்டப்பட்டது. மேல் தங்கக் கலசம் பெற்று மிளிர்கிறது.

இத்துயோர்தம் திருவுடலை நீராட்டியதில் தேங்கிய நீர்நிலை ஒரு குளமாக்கப்பட்டுக் கிழக்கே தர்காக் குளம் என்றுள்ளது.

அடக்கமான இடத்தின் முன்பகுதி மேல்வளைவு மண்டபமாக விரிந்து வெண்பளிங்குக் கற்களாலும், தளம் சலவைக் கற்களாலும் அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

இத்தர்கா அசரத் காதிறு ஒலி தர்கா எனப் பெறுகின்றது. து.ாண்மாடம் என்னும் மனோரா -.

இசுலாமிய பள்ளி வாயில்களில் நகரத்து மக்களுக்குத் தொழுகை நேரத்தை அறிவிப்பதற்குப் பாங்கு என்னும் கூப்பாட்டு முழக்கமாக முரசு அடிக்கப்படும். இது நகரா’ எனப்படும். இதற்கு உயரமான இடமாக மாடம் எழுப்பப்படுவதுண்டு. முதல் சாகிபு மனோரா

இவ்வாறாகும் மாடம் நாகூர் தர்காவிற்கு முதன்முதலாக 1635 இல் ஆண்டவர் அடக்கமான 77ஆம் ஆண்டில் தர்காவின் தென் மேற்கு மூலையில் எழுப்பப்பட்டது. 77ஆம் ஆண்டின் நினைவாக இம்முதல் மனோரா 77அடி உயரத்தில் செஞ்சிக்கோட்டை வாணியர் இபுராகிம்கான் என்பார் தம் அலுவலர்களாகிய மீரான் இராவுத்தர், மதாறு இராவுத்தர் பொறுப்பில் எழுப்பினார். இதற்கு மண்டபமும் கட்டப்பட்டது. இது 'சாகிபு மனோரா எனும் பெயர் கொண்டது. மண்டபம் நடுமண்டபம் எனப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/294&oldid=585175" இலிருந்து மீள்விக்கப்பட்டது