பக்கம்:நாகப்பட்டினம்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 277

இரண்டாவது தலைமாட்டு மனோரா

நாகை வாணிபர் நல்ல சயீது மரக்கலவரையரால் தர்கா வடமேற்கில் 1670இல் ஆண்டவர் அடக்கமான 122ஆம் ஆண்டில் இரண்டாவது மனோரா எழுந்தது. இது 931/2 அடி உயரம் கொண்டது. இதன் பெயர் தலைமாட்டு மனோரா என்பது. மூன்றாவது 'முதுபக் மனோரா

ஆண்டவர் அடக்கமான 132 ஆம் ஆண்டாகிய 1690 இல் கீழை நாட்டு மலாக்காவைச் சேர்ந்த பீர் நயினாரால் தர்காவில் வடகிழக்கில் 931/4 அடி உயரத்தில் மூன்றாவது மனோரா எழுப்பப்பட்டது. இதன் பெயர் 'முதுபக் மனோரா. . நான்காவது ஒட்டு மனோரா

பரங்கிப் பேட்டையில் அறமன்ற நடுவராகப் பணியாற்றிய தாவூத்கான் என்பவர் அடுத்த நான்காவது மனோராவைத் தர்கா எல்லையின் தென்கிழக்கில் எழுப்பினார். இஃது ஆண்டவர் அடக்கமான 150 ஆம் ஆண்டாகிய 1708 இல் நிறைவேறியது. இதன் உயரம் 80 அடி. இதற்கு முதலில் ஒட்டுக்கூரை போடப்பட்டுப் பினனர் சீராகக் கட்டப்பட்டதால் இஃது ஒட்டு மனோரா எனப்படுகின்றது.

பெரிய மனோரா -

பெரிய மனோரா என்று வழங்கப்பெறும் ஐந்தாவது மனோரா மராத்திய மன்னன் பிரதாபசிங் சாயபுவால் எழுந்தது. இதற்கு அவர் தந்தை துக்கோசி என்னும் முதல் துளசா நிலம் அளித்தார். சிர்துளசா சாகிபு அவர்கள் வணங்கி அளித்த இடத்தில் என்று மனோராக் கல்வெட்டு அறிவிக்கிறது. (பிரதாபசிங் வேண்டியபடி அவருக்கு ஆண் மகனை அருளியதால் அதன் காணிக்கையாக எழுப் பினார் என்பார்) இது அடக்கமான 199 ஆம் ஆண்டாகிய 1757 ஆம் ஆண்டில் உருவானது. 11 மாடங்களில் 131 அடி உயரமுடையது.

இம்மனோராவின் கால்கோள் 17.2.1753இல் நிகழ்ந்தது. 20.1.1755இல் நிறைவடைந்தது. இம்மனோராவின் வடக்கில் 16.2.1758இல் பொறிக்கப்பட்ட பாரசீக மொழிக் கல்வெட்டும் கிழக்கில் மறுநாள் 17.2.1753 இல் பொறிக்கப்பட்ட மராத்திய மொழிக் கல்வெட்டும் உள்ளன. பாரசீக மொழிக் கல்வெட்டில் இசுலாமிய ஆண்டான "இச்ரி ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது. இரண்டு பகுதிகளாகத் தமிழ் மொழியில் கல்வெட்டு உள்ளது. ஒன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/295&oldid=585176" இலிருந்து மீள்விக்கப்பட்டது