பக்கம்:நாகப்பட்டினம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 நாகபட்டினம்

பீலிவளை சுற்றியனுப்பிய தொண்டைக் கொடியின் குறியால் அவன் தொண்டைமான் எனப்பெற்றான். அந்த வரலாறு இருக்கட்டும். ஊர்ச் செய்திக்கு வருவோம்.

குழந்தை காணாத செய்தி நாகநாட்டார்க்குத் தெரிந்தது. குழந்தையைப் பிரிந்த கவலை யிருந்தாலும் உரியவரிடம் சேர அனுப்பியதையும், தன் குடும்பம்பற்றி அலரும் பழியும் நேராது போனதையும் எண்ணிப் பீலிவளை அமைதியுற்றிருந்தாள். அந்நாட்டரசர் வளைவனர்க்கும், இப்பகுதிபால் ஆர்வக் கருத்து கொண்டிருந்த மக்களுக்கும் புகார் நகரம் அழிந்தது பெருங் கவலையைத் தந்தது. குழந்தை பற்றிய செய்தியறியப் பீலிவளை விரும்பினாள். குழந்தை உயிரோடிருக்கும் என்னும் நம்பிக்கையில் ஐயத்தையே புகவிடாத அவள் இப்பகுதிக்கு ஒரு குழுவை அனுப்பினாள். -

நாகநாட்டார் வந்து குழந்தை பற்றி உசாவி அறிந்தனர். காலப்போக்கில் குழந்தையைப்பற்றிய செய்தியறிய வந்தவர் போன்ற பலர் இங்கே நிலைத்துத் தங்கினர்.

ஒர் உண்மையான வரலாற்றைக் கூறினாய். வளையல் துண்டே! நீ வாழ்க! ஆனால் எதற்கும் புராணம் பேசும் இம்மண்ணில் உள்ளோர் நாகம் பட்டினம் என்று கொண்டு பாம்புப் பட்டினமாகக் கண்டு கதை கட்டினர். "நாதர்முடி மேலிருக்கும் நாகப்பாம்பை" வணங்கும் போக்கில் நாகத்தைச் சூடிய சிவபெருமானுக்கு - நாகநாதருக்குத் தனியே நாகநாதர் கோயில் எழுப்பினர். நாளும் நாகப்பாம்பு அங்கு வந்து, அங்கு வைக்கப்படும் முட்டையைக் (சைவத்தை மறந்து) குடித்துப் போகிறது என்று சான்றும் கூறி வருகின்றனர், என்றேன். -

வளையல் துண்டு: "இனி நீயாவது தோலுரித்துக் காட்டு உன் நகரம் நாகர்பட்டின வரலாற்றை எழுதிப் பதிந்து வைக்கலாமே! என்றது.

"வளையல் துண்டே வா என்னுடனே இரு உன் கருத்துப் படியே நாகர்பட்டின வரலாற்றைப் பதரி திட்டை யின் இலந்தை முதல் இன்று வரை எழுதுவேன். இதில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/30&oldid=584912" இலிருந்து மீள்விக்கப்பட்டது