பக்கம்:நாகப்பட்டினம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 நாகபட்டினம்

ஏசாயா - (வீடுபேறு) .

இதற்கு முன்னர் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் எருசலேமில் 'ஏசாயா என்றொரு யூதஞானி வாழ்ந்தார். அவர் நம்பிக்கை முன்னுணர்வாளராக (தீர்க்கதரிசியாக) விளங்கியவர். "ஏசாயா என்னும் சொல்லுக்கு வீடுபேறு என்பது பொருள். அவர் ஒரு பெரும் ஆன்மீக அறவுரைத் தலைவராக விளங்கியதுடன் ஒர் ஆன்மீக நூலையும் எழுதியவர். அவரைப் பற்றிய செய்திகளும் அவர்தம் அறவுரைகளும், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் ஒர் அதிகாரத்தில் மிகப் பெரியதாக அமைந்துள்ளன. அவர் அறவுரை ஒரளவில் ஒரு சமயத்துறை எனத் தக்கது. அக்கால மக்களால் பின்பற்றப்பட்டது. ஓரளவில் பரவியது.

அவருக்கு முன்னரே 'மோசையா என்னும் ஞான அறிவிப்பாளர் ஒர் அறிவிப்பைச் செய்திருந்தார். அது. கடவுளால் நீராட்டப்பெற்ற (அபிசேகம் பண்ணப்பெற்ற) ஒரு முற்றுணர்வாளர் தோன்றுவார் என்பதாகும். கிறித்து என்றால்

மேசியா என்னும் வேறு ஒரு எபிரேயச் சொல்லுக்கு நீராட்டப் பெற்றவர் என்பது பொருள். இச்சொல் கிரேக்கத்தில் கிறித்து ஆயிற்று. இத்தகைய நீராட்டப்பெற்றவராகிய ஒருவரை யூதமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ぶ -

இன்றைக்கு 1993ஆண்டுகளுக்கு முன் பாலத்தீனத்துச் செருசலேமில் யூதர் இனத்தில், யோசேப்பு என்பார்க்குக் 'கன்னிமரியாள் வயிற்றில் ஓர் ஆண் மகவு பிறந்தது. இதற்கு "யோசுவா" என்று பெயரிட்டனர். "யோசுவா என்பதற்கு "மீட்பர்" என்பது பொருள். "யோசுவா" என்பதே உரோமிய மொழியில் "ஏக' என்றாயிற்று. -

கிறித்தவம் பிறந்தது

பாலத்தீனத்தில் வாழ்ந்த யோவான் ஃச்நானாகன்' என்னும் ஆன்மீக ஞானி ஏசுவின் 28ஆம் அகவை அளவில் நடைமுறைக் கேற்ற திருந்திய ஆன்மீக அறிவுரைகளைப் பரப்பியவர். இவற்றில் நாட்டம் கொண்டு அவரைப் பற்றத்தொடங்கிய ஏக் தம் முப்பதாம் அகவையில் தம் புதிய கோட்பாட்டைப் பரப்பினார். இத்தகைய ஒரு மீட்பரையே யூத மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இவ்ரையே கடவுளால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/300&oldid=585181" இலிருந்து மீள்விக்கப்பட்டது