பக்கம்:நாகப்பட்டினம்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை - 283

நீராட்டப் பெற்றவராகிய கிறித்து என்று ஏற்றுக் கொண்டனர். இயேசுவே தாம் எதிர்பார்த்த மீட்பர் என்றனர்.

இயற்பெயராகிய ஏசுவுடன் அருட் பெயராகிய கிறித்துவும் கூடி அவர் ஏசு கிறித்து என்று போற்றப் பெற்றார். ஏசு கிறித்து தம் அடிப்படைக் கோட்பாடாக, "கடவுள் தந்தை மக்கள் பிள்ளைகள்: கடவுளே தந்தையும் = பிள்ளையும் = தூய ஆவியாகவும் இருக்கிறார்; நான் கடவுளின் நேர்முக ஒரே மகன்" என்றார். இந்த அடிப்படைக் கொள்கை திரித்துவம் (Trinity) எனப்படும்.

யூதமக்கள் உரோமானியரிடமிருந்து தம்முரிமையைப் பெற முனைந்தனர். தமக்கு ஏசு கிறித்துவையே மேசியா என்னும் அரசுத் தலைவராகக் கொள்ள விரும்பினர்.

ஏசுவும் நாமே அரசர் தம் அரசு பரலோகத்தைச் சேர்ந்துள்ளது என்றார். இதனால் வெறுப்புற்ற உரோம அரசினர் ஏசு கடவுளைப் பழிக்கிறார்; மேசியா அரசுக்கு உரிமை கொண்டாடுகிறார். எனவே, மக்களுக்கும் நாட்டுக்கும் கீழறுப்பு துரோகம்) செய்பவர் என்றெல்லாம் குற்றம் சாட்டி அரசு அறமன்றத்தில் நிறுத்தினர். அறமன்றம் குற்றவாளியே என்று சிலுவையில் அறையத் தீர்ப்பாயிற்று. அத்தீர்ப்பின்படி ஏசு சிலுவையைத் தாமே சுமந்து சென்று அறையப்பட்டு அடக்கம் செய்யப்பட்டார். மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பர்.

ஏசு கிறித்துவின் மாணவர் பன்னிருவர். அவர்களைத் தம் கிறித்துவச் சமயத்தை உலகெல்லாம் சென்று பரப்புமாறு அனுப்பி யிருந்தார். அனுப்பப்பட்டமையால் அன்னார் அப்போத்தலர்’ எனப்பெற்றனர். அவர்களால் ஏசுவிற்குப் பின்னரும் கிறித்து சமயம் பரப்பப்பட்டது. விவிலியத்தின் புதிய ஏற்பாட்டில் 4 அதிகாரங்கள் அனுப்பப்பட்டவர்க்காக உள்ளன.

இவ்வாறு கிறித்துவ சமயம் தோன்றிப் பரவியது. இது உரோமில் ஓர் அரசுத் தலைமை நகரையே வாக்டிகன் நகர் என்று கொண்டு உலகக்கிறித்தவர்களையெல்லாம் ஆண்டது,

கத்தோலிக்கம் -

ஏசு கிறித்துவின் கிறித்துவ சமயம் பரப்பப்பட்டதுடன் ஏசு கிறித்துவும் தேவ குமாரனாகப் போற்றப் பெற்றார். கிறித்துவ சமயக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/301&oldid=585182" இலிருந்து மீள்விக்கப்பட்டது