பக்கம்:நாகப்பட்டினம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.84 ... நாகபட்டினம்

கோயில்கள் அவரையும் அவர் ஏற்றப்பட்ட சிலுவையையும் கடவுள் பாங்காகவே கொண்டன. அவரை ஈன்றெடுத்த அன்னை கன்னிமரியாள் தெய்வம்ாகப் போற்றப் பெற்றுத் தொழுகை செய்ய அமைக்கப் பெற்றார். மரியன்னை கோயில்கள் என்னும் பெயரில் "மாதாகோயில் என்று அக் கோயில்கள் கூறப்பெற்றன. இவற்றைக் கையாண்ட உரோமர் பாங்கினர் உரோமக் கத்தோலிக்கர் எனப்பெற்றனர். உலகெல்லாம் உரோமக் கத்தோலிக்கம் கால்கொள்ள ஏற்பாடுகள் நடந்தன. *४

ஏசு சங்கம்

இதன் ஓர் அமைப்பாக ஏசு சங்கம் (Jesus Society) உருவானது. இதனை இக்னிசியசு லயோலா (1491 - 1556) என்பார்

உருவாக்கினார். முதலில் பாலத்தீன இசுலாமியரைக் கிறித்துவ ராக்கும் நோக்கம் கொண்ட இது காலப்போக்கில் அனைத்துச் சமயத்தாரையும் கிறித்துவராக்கும் செயலில் ஈடுபட்டது. உலகெங்கும் இடம் கொண்டது. முன்னர் சூளாமணி விகாரைப் பகுதியில் சிறு கிறித்துவத் தொழுகை அறை அமைத்ததைக் கண்டோம். அஃது இந்த ஏசு சங்கத்தவர் அமைத்ததேயாகும். அன்னார் சமயமாற்றத்துடன் கல்விப்பணி, மருத்துவப் பணி, குமுகாயப் பணி என்றெல்லாம் மேற்கொண்டனர். தமிழ்நாட்டிற்கு வந்து தமிழ் கற்றுத் 'தேம்பாவணி என்னும் காப்பியத்தை எழுதிய வீரமாமுனிவர் இச்சங்க வழி வந்தவரே.

ஏசு கிறித்துவைப் பற்றிப் பாடிய பாவேந்தர் பாரதிதாசனார் தோழன், தோழி உரையாடலில், வினா விடையாக வைத்து, "மேதினிக்குச் சேசுநாதர் எதற்கடி தோழி? - முன்பு வெம்மைகொள் மக்களைச் செம்மை புரிந்திடத் தோழா" என்று தொடங்கி ஏசுவின் பாதை வழுவியதைச் சுட்டும் நோக்கில்,

"ஏதுக்கு நன்மைகள் ஏற்கவில்லை உரை தோழி: - இங்கே ஏசுவின் கட்டளை நாசம் புரிந்தனர் தோழா (23) - என்றார். பாவேந்தர் இக்காலத்தில் இந்திய நாட்டில், "நாசம் புரிந்ததை" என்றாலும் இச்செயல் உரோமக் கத்தோலிக்கரால் செய்யப் பெற்றது.

பிராட்டெஃச்டெண்டு .

இதனால் கிறித்துவ சீர்திருத்த முனைப்பு தோன்றியது. 15-ஆம் நூற்றாண்டில் செர்மனியின் கிறித்துவத் துறவியார் மார்ட்டின் லூத்தர் என்பார், ஒரு சீர்திருத்தப் புரட்சியையே செய்தார். இவரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/302&oldid=585183" இலிருந்து மீள்விக்கப்பட்டது