பக்கம்:நாகப்பட்டினம்.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

235 . w நாகபட்டினம்

வைத்தல், கூட்டு வழிபாடுகள் நிகழும். உரோமக் கத்தோலிக்கக் கோயில்களில் ஏசு பிறந்த (மாட்டுத்) தொழுவக் காட்சி அமைக்கப்படும். இப்பழக்கம் 1224 இல் பிரெஞ்சு நாட்டில் துவங்கி எங்கும் பரவியது. இக்கொண்டாட்டம் நம்நாட்டில், கொண்டாடப் படும். தீபாவளி போன்றதாகும். இஃது ஆங்கிலத்தில் (Christmas) எனப்பெறும். ஆயினும் இந்நாள் ஏசுவின் பிறந்தநாள் தான் என்று உறுதி செய்யப்பட்டதன்று. கி.பி. 354இல் ஓர் உரோமப் பாதிரியார் லைபிரியசு என்பார், டிசம்பர் 25 என்று ஆணையிட்டு நடைமுறைப்படுத்தச் செய்தார். .

கிறித்துவ ஆண்டு (கி.பி. - கி.மு.) பிறந்தது. நாகையில் X- .

உலகளாவிய கிறித்துவம் நாகையில் 17ஆம் நூற்றாண்டில் இறங்கியது. போர்த்துகீசியர் ஆட்சியின் போது அவர்தம் தொழுகைக் காகச் சிற்றளவில் ஒரு கோயிலைச் சிந்தாற்றுத் துறையில் எழுப்பினர். பின்னர் இது விரிவாக்கம் பெற்றது. இஃது உரோமக் கத்தோலிக்கர் கோயில்; பின்னர் உரோமக் கத்தோலிக்கத் திருச்சபையரால் பெரிதாக உருவாக்கப்பட்டது. பெருங் கூடத்தைக் கொண்டதாகவும் அதன் விமானம் வானளாவி உயர்ந்து கூம்பு வடிவில் கூரிய முகட்டை ஊசிபோல் உடையதாயிற்று. அது மக்க ளால் ஊசி மாதா கோயில் எனப்படுவதாயிற்று. கடலை நோக்கி இரண்டாவது கடற்கரையில் பரந்த முன்றில் உடையதாக உள்ளது.

இதில் அமைந்துள்ள மரியன்னை திருவுருவம் பிலிப்பைன் நாட்டு மணிலாவிலிருந்து வந்தது. அதனை அனுப்பப் பேழையில் வைத்து எடுக்கும்போது அதன்தலைப்பகுதி சாய்ந்து அமைந்த கோலத்திலேயே இருந்ததால் அக்கோலத்திலேயே அமைக்கப் பெற்றுள்ளது. இங்குச் சிறந்த வழிபாட்டுக் கிழமை சனிக்கிழமை யாகும். மறைத்திரு பெல்லாரோ என்பார் இதனைப் புதுப்பித்துப் பொலிவுறச் செய்தார். - - . அன்னை கோயில்கள்

கத்தோலிக்கக் கோயில்களாக நாகைக் கடற்கரைப் பகுதியிலேயே வடகிழக்குப் பகுதியில் இரண்டு மாதா கோயில்கள் உருவாயின. அப்பகுதியில் கத்தோலிக்க மக்கள் அதிகம் உறைகின்றனர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/304&oldid=585185" இலிருந்து மீள்விக்கப்பட்டது