பக்கம்:நாகப்பட்டினம்.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சமய நாகை 287

nഖങിങ്ങഖധിളു நாகையிலும் கத்தோலிக்கக் கோயில்கள் சிற்றளவில் அமைந்தன. இவற்றிற்கெல்லாம் முன்னர் இப்போதைய அறமன்றங்கள் உள்ள பகுதியை ஒட்டி மேற்கில் ஏசு சங்கத்தாரால் ஒரு சிறு தொழுகை அறை (Chapple) பிரெஞ்சுப் பாதிரியாரால் எழுப்பப்பெற்றது. இன்னோர் இவர்கள் தாம் முன்னேயிருந்த சிதைந்து பட்ட சூளாமணி விகாரையும், புதுவெளிக்கோபுரமும் தமக்கு இடையூறாக இருப்பதாக அரசு ஆணையுடன் இடித்தனர் என்று கண்டோம். .

ஊசிமாதா கோயில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நிகழும். மரியன்னை அணிசெய்யப்பெற்ற தேரில் மின்விளக்கு ஒப்பனை யுடன் இரவில் உலா வருவார். இதுதான் குறிப்பிடத்தக்க விழா.

கத்தோலிக்கரின் வழிபாட்டு முறைகளும் சில நடைமுறைளும் இசுலாமியம் அல்லாத பிறசமயக் கரணங்களை (சடங்குகளை) ஒட்டியனவாகவும் அமைவதுண்டு. மலர்மாலைகளைப் பயன்படுத்து வதும், மங்கலச் சுற்றாம் ஆரத்தி எடுப்பதும் கூடக் கடைப்பிடிக்கப் பெறுகின்றன. ஞாயிறு தோறும் கூட்டுத் தொழுகை முறை உண்டு. தனிச் சிறப்பு நாள் நிகழ்ச்சிகளும் நிகழும். நாள் வழிபாடும் நிகழும். தனியே பங்குத் தந்தை என்று ஒரு பாதிரியார் அமைந்திருப்பர். - ஏசு கோயில்கள்

நாகையில் ஒல்லாந்தர் ஆட்சியின்போது புகைவண்டி நிலையத் திற்கு எதிர்ப்புறம் கிழக்கில் ஒரு ஏசு கோயில் எழுப்பப்பட்டது. இது தெற்கு முகமாக அமைந்தது. ஒரளவு தொழுகைக் கூடம் கொண்டது.

இது சிதைந்து பழுதுபட்டதால் பழைய பேருந்து நிலையத்திற்கு எதிரில் தெற்கு முகமாகப் புதுக்கோயில் ஒன்று எழுப்பப்பட்டது. இதன் திருப்பணிக்குப் பல ஆலந்துப் பெருமக்கள் உதவியுள்ளனர். இதனை அறிவிக்கும் கல்வெட்டு டச்சு மொழியில் கோயில் முகப்பில் வலப்புறச் சுவரில் உள்ளது. அதில் குறித்தபடி இக்கோயில் 3 சூலை 1774இல் கட்டப்பெற்றுள்ளது. இக்கல்வெட்டின் இரண்டாவது பகுதியில் உதவியோர் பெயரில் அவ்வாண்டில் ஆளுநராக இருந்த 'இரெயினெர் வான் விளிசிங்கென் பெயர் பொறிக்கப் பெற்றுள்ளது. இவர்தம் நகரில் உள்ள மலையப்பர் கோயிலின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/305&oldid=585186" இலிருந்து மீள்விக்கப்பட்டது