பக்கம்:நாகப்பட்டினம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 - நாகபட்டினம்

திருப்பணி செய்தவர். அங்கு அமைந்த கல்வெட்டிலும் இப்பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை முன்னர்க் கண்டோம்.

இக்கோயிலில் ஒரு சிறப்பு அமைப்பாக மரத்தாலாகிய உயர் மேடை ஒன்று பின்னணி இசைக்கருவி வைப்பதற்கு உள்ளது. அதன்பின்பக்க மேலிடத்தில், ஆட்சி நாகைப் பகுதியில் விவரிக்கப் பெற்ற ஆளுநர் மனைவியின் கல்லறை மண்டபத்திலும் கல்லறைக் கல்வெட்டுப் பாறையிலும் பொறிக்கப்பெற்ற அவ்வம்மையாரின் சின்னம் அவ்வாறே மரச்சிற்பமாக வைக்கப்பட்டுள்ளது. இது அவ்வம்மையாரின் நினைவுக் காணிக்கையாகும்.

இக்கோயில் இக்காலத்தில் புதுப்பிக்கப் பெற்றது. இவை யிரண்டும் பிராடெஃச்டெண்டுக் கோயில்கள். சீர்திருத்தத் திருச்சபை

பிராட்டெஃச்டெண்டை உருவாக்கியவர் மார்ட்டின் லூத்தர் என்று கண்டோம். அவர்தம் பெயரால் அமைந்த திருச்சபை ஒன்று நாகையில் அமைந்தது. அதற்கென லுத்தரன் திருச்சபைக் கோயில் ஒன்று, பெருமாள் கீழ வீதியும் தெற்கு வீதியும் சேரும் மூலையின் கிழக்கில் அமைந்துள்ளது. இது தெற்கு முகமாய் அமைந்தது. இத்திருச்சபையார் இதனை வழிபடுகின்றனர். இதற்கெனத் தனி ஆயர் உள்ளார். ஆண்டுதோறும் ஆண்டுவிழா போன்ற வழிபாட்டு நிகழ்ச்சி நிகழும். நகைபோடாத் திருச்சபை

பின்னர் பெந்தகொஃச்தே எனப்பெற்ற இலங்கைச் சார்பான திருச்சபை ஒன்று அமைந்தது. இதற்கெனக் கோயில் அமைப்பில் ஒன்றுமில்லையாயினும் இல்லங்களில் கூடி கூட்டு வழிபாடு இயற்றினர். இன்னோர் வெள்ளுடை அணிந்தனர். பாவேந்தர் அவர்கள் நிறைய பொன் வெள்ளி நகைகள் அணிந்து கிறித்துவக் கோயிலுக்கு ஞாயிறு தோறும் செல்வோரைப் பகடிசெய்யும் கருத்தில் ஒரு பாடல் எழுதினார். அதில்,

"இலைபோட்டழைத்ததும் நகை போட்ட பக்தர்கள் எல்லோரும் வந்து சேர்ந்தார்; ஏசு மட்டும் வரவில்லை" என்று பாடினார். இதனை ஈடு செய்யும் வகையில் நகைகள் அணியாதவர்களைக் கொண்ட கிறித்து வர்கள் பெந்தகொஃச்தெயராகவும் மற்ற வகையிலும் அமைந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/306&oldid=585187" இலிருந்து மீள்விக்கப்பட்டது