பக்கம்:நாகப்பட்டினம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்று நாகை 13

வரலாற்று நாகையைத் திறந்து

பெயர் பெற்ற நாகையைப் பதிந்து,

ஆட்சி நாகையை நிறுவி,

நகரமைப்பு நாகையைக் காட்டி,

மக்கள் நாகையை விரித்து,

சமய நாகையை விளக்கி,

வணிகம், தொழில் நாகையை எழுதி,

கற்றவர் பயிலும் கடல் நாகையைப் படிக்கச் செய்து,

இன்று, நாளை நாகையை நிறைவேற்றுவேன்.

இப்பணி தொய்வின்றி முனைப்பாக நிறைவேற்றப்பட நீ என்னுடனே இரு. உன்னுடன் இருப்பது எனக்கொரு ஊக்கமாகும்: - என்றேன்.

வளையல் துண்டு பட்டென்று. 'உடைந்த வளையல் துண்டால் ஊக்கம் பிறக்கும் என்ற நம்பிக்கையே தாழ்வானது. உனக்கு இயற்கையாய் உண்டாகாததை நான் உண்டாக்குவேன் என்பதும் ஒரு புராணந்தான். அறிவுத் தெம்பிருந்தால், எழுத்தாற்றலிருந்தால், சான்றுகள் காட்ட இயலுமானால் மொழி ஊற்றத்தோடும், நாட்டுப் பற்றோடும் எழுதுகோலைப் பிடி, போ! பல்லாண்டுகாலம் பழகிக் கிடக்கும் இம்மண்ணே எனக்கு விருப்பமானது; என்னை விடு' என்றது. அதன் விருப்பப்படியே அங்கே விடுத்தேன்.

இ. அசோகன் பதிவு நாகை வரலாற்றிற்குக் கிடைத்த முதல் தடம் அசோகப் பெருமன்னன் இங்கு புத்தப்பள்ளியாம் விகாரை ஒன்றை எடுப்பித்தான் என்பதே.

கதைப்பாங்கான இக்கட்டுரையில் வளையல்துண்டு கற்பனை. மற்றைக் கருத்துக்கள் வரலாற்றுச் சான்று கொண்டவை; இலக்கிய அடித்தளம் கொண்டவை; சொல் பின்னணி உடையவை.

தமிழ் நாட்டில் நாட்டு வரலாறோ, மாந்தர் வரலாறோ, தொகுப்பாக வரையறையுடன் எழுதிவைக்கும் நோக்கம் முன் காலத்தில் தோன்றவில்லை. புதையலைப் போலத்தான் கிடைக் கிறது. தேடித் தோண்டும் ஆர்வத்திலும் புதையல் கிடைக்கும். வேறு பணிக்குத் தோண்டும் போதும் எதிர்பாராது கிடைக்கும். தமிழ்நாட்டில் வரலாறும் அத்தகையதே. நாகை நகர் வரலாறும் இதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/31&oldid=584913" இலிருந்து மீள்விக்கப்பட்டது