பக்கம்:நாகப்பட்டினம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நாகபட்டினம்

நடையாகச் சாரி சாரியாக மக்கள் வருவதைக் காணலாம். ஒலர் மரியன்னையின் படம், திருவுருவம் கொண்ட சிறு தேரை இழுத்து வருவர்; தாங்கியும் வருவர்.

அவ்வூர் தாங்க முடியாத அளவில் வருகை தரும் மக்களுக்கு அரசுப் பேருந்து நிறுவனம் தனிச்சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. வருவோர் தங்குவதற்குக் கோயில் சார்பிலும் தனியார் சார்பிலும் நிறுவனங்கள் சார்பிலும் உண்ண, உறைய ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பயணிகளுக்காகவே தனியொரு கோயில் உருவாக்க உள்ளனர்.

அடியவர்கள் தம் வேண்டுதலைச் செலுத்த வெள்ளியாலும், பொன்னாலும் பலவகைப் பொருள்களாலும் காணிக்கைகளை வழங்குகின்றனர். அவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அருங் காட்சியகம் ஒன்றுள்ளது.

விழாவின்போது புதுக்கடைகள் அமைப்பாலும் பொருளாதாரப் புழக்கத்தைப் பெருக்குகின்றன. இதனால் நாகை நகரும் வாணிப வளம் பெறுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றிலும் அன்னை அடியவர்கள் ஆயிரக்கணக்கில் வந்து வழிபடுகின்றனர்.

கோயிலுக்குக் கருவறை எனத்தரும் உள்மேடைப் பகுதியில் அன்னை மரியாளின் அழகுருவம் பொலிவுற உள்ளது. சிலுவையும் ஏசும் இடம் பெற்றுள்ளார்கள்.

நாள்தோறும் வழிபாடு என்னும் திருப்பலி 5 வேளை நிகழ் கிறது. தமிழிலும் 10 மணியளவில் ஆங்கிலத்திலும் திருப்பலிகள் நிகழும். மலையாளத்திலும் ஒரு வேளை நிகழ்கிறது. .

இக்கோயிலின் தலைமைப் பொறுப்பாளராகத் தஞ்சைப் பேராயர் உள்ளார். பங்குத்தந்தையாக மறைத்திரு சம்மனசு அடி களார் 20 ஆண்டுகட்கு மேலாக அமைந்து சிறப்பான பணிகளைச் செய்து வருகிறார்.

அன்னை மரியாளின் வேளாங்கன்னிப் பெயரால் சென்னை யில் ஒரு வேளாங்கன்னிக் கோயில் பெருமளவில் எழுந்துள்ளது. அஃதும் பெருவிழாவைக் கண்டு வருகிறது.

அனைத்து வகையிலும் சிறந்து விளங்கும் வேளாங்கன்னி அனைத்து வகை நோயாளிகளையும் அனைத்து உருவில் பெயர் பெற்றோரையும் விழாவின்போதும் பிற நாள்களிலும் கண்டு வருகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/310&oldid=585191" இலிருந்து மீள்விக்கப்பட்டது