பக்கம்:நாகப்பட்டினம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வணிகம், தொழில் நாகை

அ. வணிக நாகை

நாகை வெளிநாடுகளில் பெயர் பெற்றது ഗ്രിജ வணிகத்தால் தான். பெயர் மட்டுமின்றி வளமும் பெற்றது. வெளிநாட்டுப் பயணிகள் வணிக அங்காடி நகர்களில் (Commercial Market Towns) நாகையை ஒன்றாகக் குறித்தனர். வணிகம், வாணிபம் -

இத்துறைத் தொடர்புள்ள சொற்களை இங்குக் குறித்தல் ஒரு துணையாகும். வணிகம்" "வாணிகம்" என்னும் இரு சொற்களும் சங்க இலக்கியங்களில் உள்ளன. வாணிபம்' என்னும் சொல்லும் பின்னர் இணைந்தது.

இப்போது ஆங்கில வழக்கிற்கேற்ப இச்சொற்களை இவ்வாறு அமைத்துக் கொள்ளலாம். -

Sussoflātb — Commercial

suffsööfastb - Trade

வாணிபம் - Merchancy (வியாபாரம், வர்த்தகம்)

இவ்வாறு பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்வழிப் பாடநூல்களில் கொள்ளப்பெற்றுள்ளன. இந்நூலிலும் அவ்வாறே கொள்ளப்பெற்றுள்லன. மேலும் வானியம் என்னும் சொல்லும் உள்ளது. இஃது எண்ணெய்த் தொழிலைக் குறிக்கும். வானியனார் 'செக்கான்' என்று அகர முதலிகள் காட்டும். மேலும் இத்துறைப் பிரிவுகளுக்கு வணிபம், வணியம் என ஆக்கிக் கொள்ளலாம். நீரிலும் நிலத்திலும் -

நாகை, பட்டினமானபின் பூம்புகார் வணிகமெல்லாம் இங்கு அமைந்தன. ஏற்றுமதி, இறக்குமதி உள்ளூர் வாணிபம் கால்

1. "அறவிலை வணிகன் ஆய்அலன்" - புறம் 132

2. "யான் ஒர் வாணிகப் பரிசிலன் அல்லேன்" புறம் 208-6, 7

3. "வாணிபம் செய்வார்க்கு" என்று பாடவேறுபாட்டுடன் - திருக்குறள் 120

"இவளை வைத்துக்கொண்டென்ன வாணிபம்" பெரியாழ்வார் திருமொழி 3:7-9.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/313&oldid=585194" இலிருந்து மீள்விக்கப்பட்டது