பக்கம்:நாகப்பட்டினம்.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 - நாகபட்டினம்

கொண்டன. ஏற்றுமதி இறக்குமதிகளை மதுரைக்காஞ்சி என்னும் பத்துப்பாட்டு நூல், -

"நீரினின்று நிலத்தேற்றவும் நிலத்தினின்று நீர்ப்பரப்பவும்" என்று பாடும். அன்று பாடியது போன்று நாகைத் துறைமுகத்தில்,

"அளந்தறியாப் பலபண்டம் வரம்பு அறியாமை வந்து ஈண்டின". சங்க காலத்தில் தமிழகத்துடன் கிரேக்க, உரோம நாடுகள் வணிகத் தொடர்பு கொண்டிருந்தன. பெரிபுளூசு ஆசிரியரும் (கி.பி. 56) தாலமியும் (கி.பி. 119-181) இதனைக்குறித்தனர்.

நாகையில் கிடைத்த உரோம நாணயங்களைக் கொண்டு உரோமர் வணிகம் நாகையில் அமைந்ததை அறிகிறோம். இது கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே துவங்கிவிட்டது.

பின்னர் கீழை நாடுகளான யாவா, சுமத்திரா, இந்தோனிசியா, மலேயா, பர்மா முதலிய நாடுகளுடன் வணிகம் தொடர்ந்தது. அயல் நாட்டு வணிகங்களில் குறிப்பாக, சீனநாட்டு வணிகம் சிறப்புடையது. சீனாவிலிருந்து இந்தியாவிற்கு வரும் இரண்டு வழிகளில் கீழைக்கடற்கரையில் நாகை ஒன்று. கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் யாவா முதலிய கீழை நாடுகளுக்கும் செல்ல நாகை இன்றியமையாத துறைமுகமாயிற்று. .

இதற்கு முன்னரே, இரண்டாம் நூற்றாண்டில் இந்தோனிசி யாவில் ஆட்சியை நிறுவியோர் தென்னிந்தியரே. இவர் நாகைத் துறைமுகம் வழியாகவே சென்றனர். இதனாலும் அந்நாட்டு வணிகம் தொடர்ந்தது.

சீனாவிலிருந்து சீனா, சங்கு (Chong) என்னும் கப்பல்களில் பட்டும், பீங்கான்களும் கொண்டு வந்து இறக்கி. இங்கிருந்து சில உணவுக் கூலங்களும் முத்தும் மணியும் ஏற்றிச் சென்றனர். வரி நீக்கம் -

இடையில் உல்கு' எனப்படும் ஏற்றுமதி இறக்குமதி வரிகள் அதிகமானதால் வெளிநாட்டு வணிகம் குறிப்பாகச் சீன வணிகம் குறைந்தது. பின்னர் இது சரியாயிற்று போலும். வெளிநாட்டு வணிகம் பெருகியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/314&oldid=585195" இலிருந்து மீள்விக்கப்பட்டது