பக்கம்:நாகப்பட்டினம்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை . . .297

தேவாரத்தில்

ஏழாம் நூற்றாண்டில் நாகை வந்த ஞானசம்பந்தர் நாகைக் கடற்கரையில் "வரைஆர்வன போலும் வளரும் வங்கங்கள்" (கப்பல்கள்) என்று பாடினார். மலைபோன்று பெரிய கலங்கள் பலவாக இருந்ததை அறிகிறோம். எட்டாம் நூற்றாண்டில் சுந்தரர் நாகைக்கு வந்தார். கடவுளிடம் பல பொருள்களை வேண்டியதைக் கண்டோம். மணப்பொருள்களாம் கத்துரி, கமழ்சாந்து வேண்டினார். காம்பினோடு நேத்திரங்கள் (நேத்திரம்-கண்) என்று பார்வைக்கும், குளிர் பார்வைக்குமாகக் கண்ணாடி வேண்டினார். இவற்றை நாகையில் மட்டுமே வேண்டினார். இங்கிருந்த அங்காடியில் பார்த்துத்தான் வேண்டியிருப்பார். ஏறிச் செல்லக் குதிரை வேண்டினார். அரபிக்குதிரைகள் வந்திறங்யிவற்றை அறிந்திருப்பார். இவையெல்லாம் இங்கு விற்கப்படுவதைக் கண்டு. கோயில் பண்டாரத்திலிருந்து பணம் கொண்டு வாங்கித் தருமாறு பாடினார். இன்றும் மணப்பொருள்களும், பட்டுத் துணிகளும், குளிர் கண்ணாடிகளும், நாகை, நாகூர் அந்தி அங்காடிகளில் இருப்பனவற்றைக் காண்கிறோம்!

பிற்காலச் சோழப் பெருமன்னன் இராசராசனுடைய (கி.பி. 985-1014) கடற்படை நாகையில் இருந்தது. அவன் மகன் இராசேந்திரன் கடாரத்தை வென்றதைக் கண்டோம். இவ்வெற்றிகள் கடற்செலவில் பெரும் வணிகத்தை நோக்கமாகக் கொண்டவை.

சாவக நாட்டு சிரீவிசய மன்னர்களது வணிகத் தொடர்பு மிகுதி யாயிற்று. கி.பி. 1015 இல் இராசராசன் சீனத்திற்கு வணிகம் கருதிக் கப்பலில் துதுவரை அனுப்பி வெளிநாட்டு வணிகத்தைப் பெருக்கினான். தொடர்ந்து 1033 இல் இராசேந்திரனும் 1075இல் முதற் குலோத்துங்கனும் சீனத் தொடர்பைப் புதுப்பித்தனர். இவற்றை வரலாற்றாசிரியர் திரு நீலகண்ட சாத்திரியார் குறித்துள்ளார் (1). -

முதற் குலோத்துங்கன் காலத்தில் வெளிநாட்டு இறக்குமதியும் ஏற்றுமதியும் மிகப்பெருகின. அதற்கு வாய்ப்பாக உல்கு' என்னும் சுங்க வரியை அவன் அறவே நீக்கினான். இதனால் அவனுக்குச் "சுங்கம் தவிர்த்தோன் என்னும் புகழ்ப்பெயர் உண்டாயிற்று. இது கொண்டே அக்காலக்கட்டத்தில் வரி இடையூறாக இருந்ததை அறியலாம். - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/315&oldid=585196" இலிருந்து மீள்விக்கப்பட்டது