பக்கம்:நாகப்பட்டினம்.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தென்இல் நாகை 301

உண்மை. வாயில் குரங்கு போட்டுக்கொண்ட முத்தும் உண்மை யாகலாம். இது பாடலின் பிற்பகுதி.

"கடற்கரை குவித்தசந் தனத்தைஇந் தனத்துடன்

கலந்திறைக்கும் மந்தியைக் கனன்றுமுற் கவிக்குலம் புடைப்பதற் கெழுந்துகை முறுக்கலும் முறுக்குவாய்

புதைத்தமுத்தை விட்டெறிந்து பூகம்ஏறும் நாகையே" (5)

முத்து ஏற்றுமதி

கி.பி. 1806 இல் ஆவணக் குறிப்பு தரும் செய்தி இது: "கொல்பேரை, மலாக்கா துறைமுகங்களுக்கு முத்துச்சிப்பி 15 தூக்கு சாமிநாத செட்டியாரின் கப்பலில் நாகூர்த் துறைமுகத்தி லிருந்து ஏற்றி அனுப்பினர். சேக் மயாரன் காதர் என்பவர் கப்பலில் முத்துச்சிப்பி 5 தூக்கு அனுப்பப்பட்டன. இவற்றின் மதிப்பு 33441/4 வராகன். இவற்றிற்குக் கப்பல் கூலி 5 விழுக்காடு",

இதுகொண்டு நாகூர் ஒரு துறைமுகமாக இருந்ததும் அங்கு இரண்டு தனியாருக்குக் கப்பல்கள் இருந்ததும் அவற்றில் முத்துச்சிப்பி ஏற்றப்பட்டதும் உண்மை நிகழ்ச்சிகள். சில ஆண்டுகளில் நாகூர்த் துறைமுகம் செயலற்றுப் போயிற்று.

மற்றொரு செவிவழிச் செய்தி உண்டு. நாகூரில் ஒரு மார்வாரி, தான் வெற்றிலை பாக்கு போடுவதற்குச் சுண்ணாம்பிற்கு மாற்றாக முத்தைச் சுட்டு நீறு ஆக்கிப் பயன்படுத்தினார் என்பர்.

நாகைக் கடற்கரைக் குரங்கு வண்ணனையை முத்து ஏற்றுமதி உண்மையாக்குகிறது.

1676-இல் ஏகோசி மன்னர் நாகை ஆலந்துக்காரருக்கு நாகையையும் அதனைச் சார்ந்த பகுதிகளையும் வணிகக் குத்தகைக்கு விட்டதைத் தொடர்ந்து ஆலந்து நாட்டுப் பொருள்களும் இலங்கைப் பொருள்களும் பிற நாட்டுப் பொருள்களும் இறக்குமதி யானதுடன் சிறந்த மணப்பொருள்கள் இங்கிருந்து ஏற்றுமதி யாயின. இவற்றால் ஆலந்துக்காரரே மிகப் பயன் அடைந்தனர்.

ஆலந்துக்காரர் காலத்திலும் யானைகளும் அவர்கள் செல் வதற்குரிய மகிழ்வண்டிக்கும் விற்பனைக்குமாகக் குதிரைகளும் இறக்குமதியாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/319&oldid=585200" இலிருந்து மீள்விக்கப்பட்டது