பக்கம்:நாகப்பட்டினம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 - நாகபட்டினம்

விடுபடுமா என்ன? இருப்பினும் புதையல்கள் இல்லாமற் போகவில்லை. -

அசோகர் கல்வெட்டு (5) சோழ பாண்டிய நாடுகளில் புத்தப் பள்ளிகளை எழுப்பித்ததைக் கூறுகிறது.

சீனப்பயணி யுவான் சுவாங் (கி.பி. 629-645) தன் பயணக் குறிப்பேட்டில், அசோகன் எழுப்பித்த புத்தப் பள்ளியை நாகபட்டினத்தில் தான் கண்டதாகக் குறித்துள்ளான்.

அசோகன் கி.மு. 270இல் அரசுகட்டிலேறினான். அவ்வாண்டே கலிங்க நாட்டின் மேல் படையெடுத்து வென்றான். வெற்றி வெளிச்சத்தில் கலிங்க நாட்டின் பேரழிவு கரும்புள்ளிகளாகத் தோன்றியது. செந்நீர் காட்டிய இப்புள்ளிகள் அசோகன் உள்ளத்தைத் தைத்தன. போர் எண்ணம் ஒழிந்தது; சீர் எண்ண்ம் தோன்றியது. அச்சீர் புத்தமதம் எழுப்பிய உணர்வுச்சீர் ஆகியது. புத்தச் சார்பினன் ஆனான். நாடெங்கும் புத்த மதத்தைப் பரப்ப முனைந்தான். புத்தச் சான்றோரைப் பல்லிடங்களுக்கும் அனுப்பி னான். தன்மகன் மகேந்திரனையும் மகள் சங்கமித்திரையையும் இலங்கைக்கு அனுப்பினான். புத்தச் சான்றோர் இருந்த பகுதிகளில் புத்தப் பள்ளிகளை எழுப்பித்தான். அவ்வகையில் எழும்பியதே நாகர்பட்டினப் புத்தப்பள்ளி. அது பதரி திட்டையில் எழுப்பப் பட்டதால் பதரி திட்ட விகாரை எனப் பெற்றது. அப்பகுதியில் முதன் முதலில் தோன்றிய விகாரையாகையால் ஆதி விகாரை என்று பின்னர் சிறப்பித்துக் குறிக்கப்பெற்றது.

இவ்விகாரை கி.மு. 265 - 270 இடைப்பட்ட காலத்தில் கட்டப் பெற்றிருக்கலாம். எனவே, இன்றைக்கு (1992) இரண்டாயிரத்து இருநூற்று ஐம்பத்திரண்டு (2252) ஆண்டுகளுக்கு முன்னர் நாகர்பட்டினம் பகுதி பதரி திட்டா என்னும் பெயரில் விளக்கமுற்றது.

ஓரிடத்தில் புத்தப்பள்ளி எழுப்பப்பெற்றது என்றால் அங்கு முன்னரே புத்தத் துறவிகள் இடம் பெற்றிருக்க வேண்டும். இவ்வகையில் நோக்கினால் கி.மு. 270 -இற்கு முன்னரே இவ்விடம் துறவிகள் உறைவிடமாக அமைந்தமை புலப்படும்.

ஈ. ஊறுபாட்டால் ஊர்

இவ்விடத்தைப் புத்தத்துறவிகள் நாடி வந்தார்களா, ஏதோ சூழலால் இடம் பெற்றார்களா என்னும் வினாக்களை ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/32&oldid=584914" இலிருந்து மீள்விக்கப்பட்டது