பக்கம்:நாகப்பட்டினம்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 நாகபட்டினம்

வருவாயில் அரைப்பங்கு

1770இல் திருமுல்லைவாயில் திருமுல்லையப்பர் கோயில் திருப் பணிக்கு ஏற்பாடானதை ஒரு செப்பேடு குறிக்கிறது. இதில் வாணி பர்களே தம் பங்காக மகிமை செலுத்தியதை அறிகிறோம். அச்செப்பேட்டில் கீழ்வருமாறு உள்ளது: - "பெரியதனத்தில் வந்தகாள் கறுத்தான் மரைக்காயர் od 4 * * * பிற நாகூர் சிவந்தலிங்க செட்டியார் னாகபட்டணம் திருமேனி செட்டியார் ............ எழுதிக் கொடுத்த வயனம் துறைமுகத்தி லேற்றப்பட்ட நெல் கண்டி 100 க்கு மகமை வராகன் 1 ஆக காய் ஏத்து தானியங்களுக்கு கண்டி 100க்கு வராகன் 2" (6) என்பதிலிருந்து இங்கிருந்து நெல்லும், கடலை, முதலிய காய் கறிகளும் ஏற்றுமதியானதை அறிகிறோம். இதில் நாகை, நாகூர் வணிகப் பெருமக்கள் பங்கு கொண்டனர். -

(வந்தகாள் - வர்த்தகாள். கண்டி - ஒருவகை நெல் அளவை) 1799 முதல் 1845 வரை வேர்க்கடலை, புகையிலை, துணிகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாயின. சிற்றளவில் காய்கறிகளும் ஏற்றுமதியாயின. - கலங்கள்

1821-இல் இரண்டாம் சரபோசி மன்னன் காலத்தில் ஒரு கப்பல் வாங்கப்பட்டுக் கல்கத்தாவிலிருந்து நாகைத் துறைமுகத்திற்கு வந்தது. மேலும் . 1838இல் இச்சரபோசி மன்னரே இரண்டு கப்பல்களை வாங்கி அவற்றிற்குப் பிரகதீசுவரர்', 'பிரசாத் எனப் பெயர்களிட்டு வணிகத்திற்குப் பயன்படுத்தினார். இக்கப்பல்கள் ஆங்கிலருக்கு வணிகத்திற்காக 5000/- உருவா வாடகைக்குக் கொடுக்கப்பட்டன. ஆங்கிலர் சார்பில் சேம்சு உரோசு (James Rose) என்பார் இதனைப் பெற்றவராவர். - பெற்றார் குடியும் ஏறியது

இக்காலக் கட்டத்தில் அரிசி, தேங்காய், ஆடுகள் முதலியவற்றுடன் மிளகு, ஏலம் முதலியவை ஏற்றுமதியாயின. ஆங்கில நாட்டுப் பொருள்கள் விற்பனைக்காக இறக்குமதியாயின. -

"சாராயக் குப்பிகள் பத்தை நாகூர் பந்தர் தெற்கிலிருந்து வடக்கே கொண்டு செல்ல வரியாக வெள்ளிப்பணம் ஆறு" பெற்றதை ஒர் ஆவணம் காட்டுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/320&oldid=585201" இலிருந்து மீள்விக்கப்பட்டது