பக்கம்:நாகப்பட்டினம்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 303

ஆங்கிலேயர் ஆட்சியில் நாகையில் துறைமுக அலுவலகம் (Port Office) அமைக்கப் பெற்று மலேயா, சிங்கப்பூர், பர்மா முதலிய நாடுகளுக்குப் பயணிகள் கபபலும் சரக்குக் கப்பலும் விடப்பட்டன. இதனால் ஏற்றுமதி இறக்குமதிகள் பெருகின எனலாம்.

வெங்காயம், மிளகாய், மஞ்சள் முதலியவைகளுடன் கைத்தறித் துணிகள், சில்லறையான அப்பளம், வடாம் முதலியவைகளுடன் பதிப்பான நூல்களும் ஏற்றுமதியாயின. இதில் தனியார் சிலரும், BTsutloorb sustfää Goglošāmūlb (Nagapattinam Chamber of Commerce) பங்கு கொண்டனர். இறக்குமதியான கோதுமை, மூட்டைகளும் உர மூட்டைகளும் சிறு சிறு குன்றுகள் போலக் கடற்கரையின் வெளியிடங்களில் குவித்து வைக்கப்பட்டன.

ஆடுகள் குதித்தன

ஒர் இலக்கியச் செய்தியை இங்குப் பொருத்திப் பார்க்கலாம். பூம்புகாரில் இறக்குமதியாகி உல்கு கட்டப்பட்டதன் குறியாக,

"புலி பொறித்துப் புறம் போக்கி மதிநிறைந்த மலிபண்டம் - பொதி மூடை"கள் போர் போலக் குவிந்து கிடந்தன. இப்போர் மீது வரையாடுகளும் நாய்களும் தகராடுகளும் ஏறிக்குதித்து விளையாடின என்று பட்டினப்பாலை (7) அறிவிக்கிறது. இக்காட்சி 1800 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகைக் கடற்கரையில் நிகழ்ந்ததை நான் கண்டு மகிழ்ந்தேன். மேலே குறிப்பிட்ட கோதுமை, உர மூட்டைப் போரின் மேல் ஆடுகளும் குட்டிகளும் ஏறி ஒடிக் குதித்தன.

சங்க இலக்கியங்களின் வண்ணனை வெற்று அளப்பு அன்று. உண்மையின் மெருகுவடிவமாகும் என்பதை இதனாலும் உணரலாம்.

இவ்விவரங்களினால் கி.மு. முதல் கி.பி. 20ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து கால இடைவெளியின்றி நாகையில் வெளிநாட்டு வணிகம் நிகழ்ந்தது என்பதை அறியலாம். உள்நாட்டுக் கடைக்காரர் வாணிபமும் தொடர்ந்து நிகழ்ந்தது; நிகழ்கிறது.

இன்றும் நாகை அந்திக்கடையிலும் நாகூர் தர்கா அண்டையி லுள்ள கடைகளிலும் வெளிநாட்டுப் பொருள்கள் சிலராலும், வெளிநாட்டுப் பொருள்கள் என உள்நாட்டுச் சரக்குகள் பலராலும் விற்கப்படுகின்றதைக் காணலாம். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/321&oldid=585202" இலிருந்து மீள்விக்கப்பட்டது