பக்கம்:நாகப்பட்டினம்.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 3.05

இப்போதும் நாம் விலையமைப்பை அகவிலை என்கிறோம். அகவிலை என்பது விலையமைப்பிற்கு ஓர் அளவுகோல், அஃகம் விலை அஃகவிலை - அகவிலை என்றாயிற்று. 'அஃகம் என்றால் நெல்லைக் குறிக்கும். நெல்லின் மதிப்பை வைத்துப் பிற பொருள் மதிப்பிடப்பெற்றமையால் அகவிலை ஆயிற்று. எனவே முதல் பண்டமாற்று நெல்லில் துவங்கியது. இக்காலத்தும் நெல் அறுப்போர் நெல்லைக் கடையில் கொடுத்துச் சமையல் பொருள்களை நாகைப் பகுதியிலும் வாங்குகின்றனர்.

இப்பண்டமாற்று வெளிநாட்டு வணிகத்திலும் நடந்தது. நாகை வணிகத்திலும் பண்டமாற்று வணிகத்தைக் கீழை நாட்டினரும் சீனரும் நடத்தினர். காசும் பணமும்

காலப்போக்கில் பண்ட மதிப்புகளை ஒரு சீராகக் கொள்ள இயலாததால் நாணய முறை வந்தது. தமிழகத்தில் காசு என்னும் நாணயம் தோன்றியது. காசு என்னும் சொல்லுக்கு 'மணி' என்பது முதற் பொருள். அது பொன்னால் செய்யப்படும் மணி. அம்மனி முன்னர் உருண்டையாகக் காது வைக்கப்பட்டிருந்தது. பின்னர் தட்டை வடிவமாயிற்று. நாணிலோ, கம்பியிலோ கோக்கும்படி காது வளையம் வைக்கப்பெற்ற காசுக்கு ஆயிற்று. இக்காசைக் கிளி மூக்கில் கொண்ட வேப்பம்பழத்திற்குக் குறுந்தொகை உவமையாகக் கூறுகிறது. (8)

பசும்பொன்னாலான வட்ட வடிவக் காசு கோக்கப்பட்ட மாலையை ஐங்குறுநூறு,

"பொலம்பசும் பாண்டில் காசுநிரை அல்குல்" (9) என்று கூறுகிறது. (பாண்டில் - பட்டம்)

பொன்னாலும் பின்னர் வெள்ளி, செப்பு, பித்தளை, ஈயம், தோல் முதலியவற்றாலும் தமிழகத்தில் காசுகள் தோன்றின.

"நெஞ்சே உனையோர் காசா மதியேன்" (10) என்று தாயுமானவர் நெஞ்சை இழிந்த நாணயமாகப் பாடினார்.

இவ்வாறு நெல்லும் நாணயமும் (காசும்) வணிகத்திற்கு மாற்றல் பொருள்க ளானமையால் இரண்டையும் விரைந்து தேடிக்கொள்ள வேண்டும் என்று அவ்வையார், Iち T.ない。

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/323&oldid=585204" இலிருந்து மீள்விக்கப்பட்டது