பக்கம்:நாகப்பட்டினம்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306 நாகபட்டினம்

"அஃகமும் காசும் சிக்கெனத் தேடு" (11) என்றார். இவ்வறிவுரை பண்டமாற்றையும் நாணய மாற்றத்தையும் குறிப்பாக அறிவிக் கிறது.

காசுடன் பின் "பணம்' என்பதும் சேர்ந்தது. பணம் பாம்புப் படம் போன்றது என்னும் பொருள் கொண்டது. இப்போதும் காக, "பணம் என்பது வழக்கு.

நாணயத் தோற்றம்

உலகில் கி.மு. 8ஆம் நூற்றாண்டில் லிபியா நாட்டு மன்னன் கிரிசசு (Croesus) என்பான் முதன்முதலில் நாணயத்தை வெளியிட்டான். இது பொன்னிலும் வெள்ளியிலும் வந்தது. பின் பிற உலோகங்களிலும் வந்தது. கி.மு. 2ஆம் நூற்றாண்டில் நிக்கலில் வந்தது.

நாகையில் வெளிநாட்டு நாணயமாக உரோமப் பொன் நாணயங்கள் கிடைத்துள்ளன. உரோமப் பொன் உயர்ந்ததாக இருந்ததால் தமிழர் அதனை உடைமை (சொத்து) யாகச் சேர்த்தனர்; புதைத்தும் வைத்தனர். விந்திய மலைக்குத் தெற்குத் தமிழத்தில் உரோமத் தங்க நாணயம் புதையல்களாகக் கிடைத்துள்ளன. அவற்றில் ஒன்று நாகைப் புதையல், புதையல் அன்றிச் சிதறலாகவும் நில அகழ்வில் கிடைத்துள்ளன. எனவே, நாகை வணிகத்திற்கு உரோமப் பொன் நாணயம் பயன்பட்டதை அறியலாம்.

பின்னர் சீனநாட்டுச் சீனக்கனகம் என்னும் பொன் நாணயம் நாகையில் புழக்கமாயிற்று. வணிகத்தால் வந்தவை இவை.

முற்காலத் தமிழக மன்னர்களால் நாணயங்கள் பல உலோகங் களால் அவரவர் குறியீட்டு முத்திரையிடப் பெற்று வெளிவந்தன. புழங்கின.

பிற்காலச் சோழன் இராசராசப் பெருமன்னன் ஆட்சி நாணயங்கள் ஒரு பக்கம் நிற்கும் அரசன் குறியுடன் மறுபக்கம் சோழர் சின்னமாகிய புலி பொறிக்கப்பெற்றவை. இராசேந்திரன் ஆட்சி நாணயங்கள், படுத்த புலி பொறிக்கப்பட்டவை, முதற் குலோத் துங்கன் ஆட்சி நாணயங்கள் புலி, வில், மீன் ஆகிய மூன்று முடி மன்னர் சின்னங்களும் ஒரு சேரப் பொறிக்கப் பெற்றவை. இக் குலோத்துங்கன் வெளியிட்ட காசு ஒன்றில் சு' என்னும் எழுத்து ஒன்று குறிக்கப்பெற்றுள்ளது. இது குலோத்துங்கன் சுங்கம் தவிர்த் தவன் என்பதன் அறிகுறிப் பதிவாகும். இவையனைத்தும் நாகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/324&oldid=585205" இலிருந்து மீள்விக்கப்பட்டது