பக்கம்:நாகப்பட்டினம்.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 309

ஆலந்தார் காலத்தில்தான் தமிழில் காசு அச்சிட்டனர். ஆங்கிலர் காலத்தில் பிறமொழிகளுடன் தமிழும் இடம் பெற்றது. நாகப் பட்டினக் காசு'என்னும் பெயரிலும் ஆலந்தாரே வெளியிட்டனர்.

ஆலந்தாரே பித்தளையில் நாணயம் வெளியிட்டனர். அது நாகூர்ச் சல்லி எனப்பெற்றது. நாகூர் பெயரிலும் அவர்களாலேயே வெளியிடப் பெற்றது.

"நாகப்பட்டினம் வராகன்" என்று அச்சிடப்பெற்ற பணத்தின் மதிப்பு, -

"நாகப்பட்டினம் வராகன் 15உக்கு ஒன்பது. சக்கரம் 2.4 5/8 வீதம் சக்கரம். 35.9 5/8 என்றும் மோடி ஆவணம் ஒன்றால் அறிய முடிகிறது. இம்மதிப்பீடு நாகையிலும் கணக்கில் கொள்ளப்பட்டது. பண்டசாலைகள்

ஒல்லாந்தர் காலத்திற்கு முன்னரே பிற்காலச் சோழர் காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளூர் வணிகருடைய பண்ட சாலைகள் இருந்தன. பையப்பைய அவை வளர்ந்து முதற் கடற்கரைச் சாலையிலும் இரண்டாம் கடற்கரைச் சாலையிலும் முழுமையாகப் பண்டசாலைகளே அமைந்தன. இவற்றின் துணையால் பல்வகை யாரும் ஊக்கத்துடனே முனைப்பாக ஏற்றுமதியும் இறக்குமதியும் செய்து நாகையை வளப்படுத்தி வருகின்றனர்.

நாகை தன் வணிகத்தையும் உள்ளுர் வாணிபத்தையும் பண்ட மாற்றை ஓரளவாகக் கடைப்பிடித்தும் நாணயம் கொண்டும். நாணயமாக நடத்துகின்றது. -

பொதுவில் மக்களின் அன்றாட வாழ்க்கை என்பது நாணயமும், தாள்பணமும் இன்றி இல்லை.

நாகை தொடர்ந்து, தான் வணிகத்திற்குத் துணையாக நின்றும், வாணிகத்தைத் துணையாகக் கொண்டும் சிறந்தது; சிறக்கின்றது.

இ. நாகையில் வணிக வாணிபப் பெருமக்கள்

பயன்படு பொருள்கள் உடல் என்றால் அவற்றிற்கு உயிரூட்டு

பவர் வணிகர். வணிகத்தால் அவர் பெயர் பெறவில்லை. அவர் செய்வதால் வணிகம் பெயர்பெற்றது. வணிகத்தாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/327&oldid=585208" இலிருந்து மீள்விக்கப்பட்டது