பக்கம்:நாகப்பட்டினம்.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3姐强 - நாகபட்டினம்

ராலேயே குழுவினராக வணிகம் செய்தனர். நாகையிலேயே இன்னோர் ஒரு பகுதியில் குடியமர்ந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. இதனை மன்னர் இராசராசன், இராசேந்திரன் காலக் கல்வெட்டுக்கள் (21) காட்டுகின்றன. கடலில் அறம்

கீழைநாட்டு வணிகத்திற்குச் சென்றோர் கூட்டாகவும் சென்றனர். தனியாகவும் சென்றனர். பூம்புகார் கம்பளச் செட்டி என்பவன் தன் தனிக் கப்பலில் வணிகத்திற்குச் சென்றவன், வணிகக் கப்பல்' என்று கூட்டாகச் செல்லும் கப்பல் வணிகம் உண்டு. - ெ *மேகலையில். பூம்புகார் நகரைச்சார்ந்த சாதுவன் என்னும்

むFlーはQ-,

്ഷ போகும் வாணிகர் தம்முடன்" (22) தன் தனி வணிகத்திற்குப் போனான் என்று காண்கிறோம். இதுபோன்றே அமுதசுரபி என்னும் உணவு வழங்கும் பாண்டத்துடன் ஆபுத்திரன் என்பான் சாவக நாட்டிற்குச் சென்றான். அவனும்,

"வங்க மாக்களொடு மகிழ்வுடன் ஏறிச்" (23) சென்றதை அக்காப்பியம் காட்டுகிறது. கடலில் வணிகத்திற்குச் செல்லும் குழுவினரை வங்கமாக்கள் என்றது மணிமேகலை.

இவற்றின் மூலம் மற்றொன்றையும் காணலாம். ஆபுத்திரன் அறம் செய்யச் சென்றான். அவனை வணிகர் ஏற்றிச் சென்றமை வணிகத்தோடு அறத்திற்கும் உதவியதைக் காட்டுகிறது.

நாகை, நாகூர் நகரங்களில் வணிகக் குழுவினர் இருந்தனர். அன்னார் அறமும் செய்தனர்.

"கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் சீரனோர்த்தாரணம் செய்ய நாகூர் வகையறா வணிகர்களிடம்

இருந்து யாசகம் செய்தது ரூ. 2000/- என்று ஒரு கல்வெட்டு கூறுகின்றது. - - நாகை வணிகக் குழுமம் -

நாகையில் இக்காலத்தும் வணிகக்குழு தோன்றிச் செயலாற் slug, Brâul lossrob Gustofláság (glob (The Nagapattinam chamber of commerce) என்னும் பெயரில் பல வணிகர்களைக் கொண்ட குழுமம் ஒன்று ஏற்றுமதி இறக்குமதி வணிகத்தில் நன்கு செயலாற்றி நாகைக்கு வணிக வளம் தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/332&oldid=585213" இலிருந்து மீள்விக்கப்பட்டது