பக்கம்:நாகப்பட்டினம்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை - 315

இதுபோன்று உள்ளூர் வாண்பர்கள் ஒரு சங்கமாக நாக பட்டினம் வர்த்தகர் சங்கம் என்று அமைந்து இயங்கி வருகின்றனர். .

இவ்வாறு குழுவுடன் நாகையில் அமைந்த வணிகம் ஒரு வகைப் பொருளை மட்டும் விற்கும் வணிகத்திலும் சிறந்தது. உப்பு வணிகம் மீன் வணிகம், நெல் வணிகம், வெளிநாட்டுப் பொருள்கள் வணிகம் என்று பல வணிகர் இருந்தனர்; இருக்கின்றனர்.

அஞ்சு வண்ணம்

இவருள் அஞ்சு வண்ணத்தார் என்பார் ஒரு வகையினர். 'அஞ்சு' என்பது ஐந்து' என்றறிவோம். இவ்வெண்ணிக்கை வணிகர் எண்ணிக்கை அன்று. வணிகப் பொருளின் எண்ணிக்கை. ஐந்து வகை வண்ணப் பொருள்களை விற்றதால் 'அஞ்சு வண்ணத் தார் எனப்பட்டனர்.

இன்னார் இசுலாமியர். யவனர் எனப்பெறும் அரபியர் இவ்வணிகத்தைச் செய்ய வந்தனர். இவர்கள் யவன அரச குலத்தவனான ஒருவனையே முதல்வனாகக் கொண்டு வந்தனர். இதனைப் 'பல்சந்தமாலை என்னும் நூல்,

"இயவன ராசன் கலுபதி தாம்முதலென்ன வந்தார் அயன்மிகு தானையர் அஞ்சு வண்ணத்தார் ஏழ்பெருந்தேர் அங்கத்து இயவனர்கள் அல்லா என வந்து" (24) என்று பாடியுள்ளது. "அஞ்சு வண்ணத்தவர்.... அல்லா என வந்து" என்பதால் இவர் அல்லாவை வணங்குகின்ற இசுலாமியர் ஆவார். கலுபதி என்பவனைத் தலைவனாகக் கொண்டு வந்தனர். இன்னார் தமிழகத்தில் தங்கிக் குதிரை பூட்டிய (சாராட்டு) தேரில் உலா வந்துள்ளனர். வலிமையான சிறு படையும் இவர்கட்கு இருந்தது.

இன்னோர், "இழ்க்கடற்கரையில் பாண்டிய நாட்டிலுள்ள தீத்தாண்ட தானபுரத் திலும் அக்குழுவினர் இருந்தனர் என்பது அவ்வூர்க் கல்வெட் டொன்றால் அறியப்படும். அன்றியும் சோழநாட்டிலுள்ளதுறைமுகப் பட்டினமாகிய நாகபட்டினத்திலும் அவர்கள் வாணிகம் நடத்திக் கொண்டு சிறப்புற்றிரு' (2.5) என்று கல்வெட்டறிஞர் சதாசிவப் பண்டாரத்தா -msi.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/333&oldid=585214" இலிருந்து மீள்விக்கப்பட்டது