பக்கம்:நாகப்பட்டினம்.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 நாகபட்டினம்

'அஞ்சு வண்ணம் என்பது மணப்பொருள்கள் ஐந்தைக் குறிக்கும். அவை, சந்தனம், சவ்வாது அத்தர், புனுகு, பன்நீர் (பன்னிர்) ஆகும். இவற்றை விற்போர் 'அஞ்சு வண்ணத்தார். ஆயினர். இவற்றுள் சில அரபு நாட்டு இயற்கை ஆக்கப் பொருட்கள். அரபு நாட்டு இசுலாமியர் இவற்றைக் கொண்டு வணிகம் செய்தனர். இன்றும் ஒரு தனிப் பேழையில் இவற்றுடன் நாகரிக மண வடிப்பு நீரியம் (cent) கொண்டு செல்வர். வீடுகளுக்குச் சென்று விற்பதுண்டு. இவர் இசுலாமியராக இருத்தலை இன்றும் காணலாம். "அறத்தின்வண்ணமான ஊர்"

நான்கு திக்கிலிருந்தும் நாகைக்கு வந்திறங்கிய பொருள் களைப் பாடிய காளமேகப் புலவரின் பாடலில், "அடிப்பரப்புடைக் கலத்து - அனேக வண்ணமாக வந்த

அஞ்சு வண்ணமும் தழைத்து அறத்தின் வண்ணமான ஊர் ........ நாகையே" என்றுள்ளது. இதில் பெருங் கப்பலில் பல பொருட்களுடன் இந்த அஞ்சு வண்ணப் பொருள்களும் வந்து நாகை தழைத்ததைக் கூறியுள்ளார். நான்கு திக்கிலிருந்து வந்த @ಾರ முதலான பெரும் மதிப்புடைய பொருள்களுடன் இந்த ஐந்து வகை மணப் பொருள்களும் கூடிய விற்பனையால் ஊர் தழைத்து வளம் பெற்றது. இவ்வணிகத்தார் தம் வருவாய் கொண்டு நாகையை வண்ண மாக்கியவர்: அறம் செய்தும் வண்ணமாக்கியுள்ளனர். இதனால் நாகை "அறத்தின் வண்ணமான ஊர்" ஆயிற்றாம். கமுக்கக்குறிகள்

காளமேகத்தின் மற்றொரு பாட்டால் வணிகர் தங்களுக்குள் கமுக்கமாகக் கூறிக்கொண்ட குழுஉக்குறிச் சொற்களையும் காட்டியுள்ளார். சொற்கள் இவை:

"கருந்தலை, செந்தலை, தங்கால், திரிக்கால், கடை, குடவர், தாட்டி, கொத்து, கரந்தைகள், அரும்பு, சொத்து". (2.6)

இச்சொற்கள் நாகை வணிகர்களாலும் வழங்கப்பெற்றுள்ளன. இவற்றின் மறைபொருள்களை எளிதில் அறியக்கூடவில்லை. இவ்வகையிலும் நாகை வணிகர் சிறந்துள்ளனர். இவ்வகை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/334&oldid=585215" இலிருந்து மீள்விக்கப்பட்டது