பக்கம்:நாகப்பட்டினம்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 317

வல்லமைகளுடன் சிறந்திருந்ததால் நாகை வணிகரை நாகைப் புலவர் அழகுமுத்து அவர்கள், "மருவு சோணாட்டிலுறை சிறையெலாம் மீட்டுவிடு வணிகர்சேர் நாட்டில் வரு மருகேசா" (27) என்று சிறப்பித்தார். சோணாட்டில் தேங்கிச் சிறைப்பட்டிருந்த பொருள்களை யெல்லாம் கொண்டு வந்து ஏற்றுமதியாலும் உள்நாட்டு வாணிபத் தாலும் சிறக்கவைத்ததைக் காட்டியுள்ளார்.

இக்காலத்தில் நேரும் கடையடைப்பு போன்று அக்காலத்திலும் கடையடைப்புச் செய்துள்ளனர். இதனைப் பெருந்தொகை என்னும் தொகை நூலில் "நாகப்பட்டினத்துச் செட்டி கடையடைப்பித்துப் பாடச்சொன்ன போது காளமேகப் புலவர் பாடியது" என்று தலைப்பு வைத்து ஒரு பாடலைக் காட்டுகிறது. கடையடைத்தலும் ஒரு தொடர்கதை போலும். - அண்ணாச்சி’

ஆலந்தார் காலத்தில் கடற்கரைச் சாலையில் அமைந்த பண்ட சாலைகளைத் தொழிற்சாலை என்றனர். இவை சேமிப்புக் கிடங்குகள்.

இன்றும் சேமிப்புக் கிடங்குகளாம் பண்டசாலைகள் உள்ளன. இக்கால நாகை வணிகர்களில் முதன்மையானவராகப் பெரு வணிகர் திரு அ.து. செயவீரபாண்டிய நாடாரைக் குறிக்க வேண்டும். வணிகர் மட்டுமின்றிப் பொதுமக்களும் இப்பெருமகனாரை 'அண்ணாச்சி என்றே அன்புடன் அழைக்கின்றனர்.

கூர்ந்த அறிவுள்ள நாகை இளைஞர் திரு சு. அசனல் ஆரிபு என்பார் சென்னையில் பொருள்களை ஏற்றி இறக்கும் தொழிலில் சிறந்து விளங்குகின்றார். பொலிவும் நல்லொழுக்கமும் உடைய இவர் என்பால் பேரன்பும், பெருமதிப்பும் கொண்ட அன்பு .Tsuitסsoחפu

இக்காலத்தில் இளைஞர்கள் வணிகத்தில் முனைப்புற்று வணிகத்திற் சிறந்து வருகின்றனர். தாம் வணிகத்தால் பெற்ற வளங் கொண்டு சுழற் சங்கம், அரிமா சங்கம், தமிழ்த் தொடர்பான ಈುಹ4, கல்வி நிலையங்கள், சமய மன்றங்கள். கோயில், அறக்குழுக்களில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/335&oldid=585216" இலிருந்து மீள்விக்கப்பட்டது