பக்கம்:நாகப்பட்டினம்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3i 3 - . நாகபட்டினம்

பங்கு கொண்டு அறப்பணியாற்றுகின்றனர். இன்னோர் பட்டியல்

நீளமானது. -

நாகை வணிகர் நற்றமிழர் வணிகர் வாகை சூடும் வளமார் வணிகர் ஈகை யதிலும் எடுப்புடை வணிகர்

பாகை ஒத்த பண்புடை வணிகர் - என்று சிறப்பிக்கலாம்.

ஈ. தொழில் நாகை

1. "தள்ளா விளையுள்"

நாகை ஒரு பெரிய தொழில் நகரம் அன்று. தொழில் அறவே அற்ற நகரமும் அன்று. நிலத்தின் சிறப்பான தொழில்களைக் கொண்டது. செயற்கையான தொழில்களையும் ஏற்றது.

நாகையின் இயல்புத் தொழில் இயற்கை வளமாம் கடலால், நிகழ்வது. திருவள்ளுவர் "தள்ளா விளையுள்" என்றார். எக் காலமும் எந்நிலையிலும் தள்ளாத - அறாத - குறையாத விளைச் சலைத் தருவது கடல், மீன் ஒரு விளைச்சல், உப்பு ஒரு விளைச்சல், இவையிரண்டும் கடலோடும் வணிகத்திற்கும் இடந்தரும் துறையுமாகும். *

கடல் முத்து, பவளம், சில கனிமம் முதலியவற்றின் விளை நிலமாயினும் முன்னிரண்டையும் நாகைப் பகுதிக் கடல் பெற வில்லை. அதனால் முத்துக்குளித்தல், உவளக் கொடி கொள்ளல் என்னும் தொழில்களைக் கொள்ள இயலாது போயிற்று.

மீன்பிடி தொழில் முதன்மையானது. இது நுளைத்தொழில் எனப்பட்டது. இதனைச் செய்வோர் நுளையர்" என்றும் பரதவர்' என்றும் முற்காலத்தில் அழைக்கப்பெற்றனர். இவ்விரு சொற் களையே சங்க இலக்கியங்களில் காண்கிறோம். இவ்விரண்டு சொற் களும் கடற்கரை நிலமாம் நெய்தல் நிலத்தொடர்பிலே பேசப்பட்டன. 'மீனவர் என்னும் பெயர் பின்னர் நேர்ந்தது. தொன்மைக்காலத்தில் 'மீனவன்' என்றால் மீன் பொறித்த கொடியை உடைய பாண்டியனையே குறிக்கும். இடைக்காலத்தில் மீனைப் பிடித்து விற்கும் தொழிலால் மீனவர் பெயர் அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/336&oldid=585217" இலிருந்து மீள்விக்கப்பட்டது