பக்கம்:நாகப்பட்டினம்.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணிகம், தொழில் நாகை 3.19.

"வலை வளத்தொழில்" (28) என்று பிள்ளையவர்களும் - "வலை வளத்து உண்டி" (29) என்று சேக்கிழாரும் பாடினர்.

2. மீனவர் ஆட்சி

இத்தொழில் மக்கள் வத்தல்' என்னும் மிதவையில் ஒரிரு கல் தொலைவிலும் நாவாயில் (படகில்) கடலுள்ளும் சென்று மீன் பிடிப்பர். பெருவலை கொண்டு பிடிப்பர். வத்தலின் செல்வோர் சில பொழுதுகளிலும் ஒருநாள் அளவிலும் செல்வர். நாவாயில் செல்வோர் சில நாள்கள் தொடர்ந்தும் பிடிப்பர். பெரும்சால் பானைகளில் நீர், உணவு, கொண்டு செல்வர். சமையல் பொருள்களுடன் போய்ச் சமைத்து உண்பதும் உண்டு. பலர் கூடியே செல்வர். இரவில் விளக்குக் கொள்வர்; காற்றை வேலை வாங்கிப் பயணம் செல்வர். அலைகளின் ஆட்டம் அவர்கட்கு ஊஞ்சலாட்டம், தெளித்து அடிக்கும் உவர்நீர் பன்னிர்த்தெளிப்பு வலைதான் ஆட்சிக்கோல். கடற்பரப்பெல்லாம் அவர்தம் ஆட்சி நாடு. காற்றை அறிந்து, வான நிலை தெரிந்து செயற்படுவதுதான் அவர்தம் ஆளுகைத்திறன். கூடைகூடையாக மீன்களைப் பெறுதல்தான் பகை வரிடமிருந்து பெறும் திறைப் (கப்பம்) பொருள். கரையில் நின்று அவைகளைப் பெற்று அவர்களை வரவேற்போர்தாம் இவ்வரசர்தம் அரசியர். கடற்கரைக் குப்பந்தான் இன்னோர் தலைநகர். கடலி லிருந்து நகரில் ஒளிவிடும் விளக்கை எண்ணுவதே இவர்கள் பொழுதுபோக்கு. இவர்தம் படகு விளக்குகளை எண்ணுவதே கரையாரின் ஒரு பொழுதுபோக்கு.

மீன் பிடிக்கச் செல்லும் முன் உரியவர்களை அழைக்க அடிக்கும் முரசு நெய்தல்பறை', 'மீன் கோட்பறை' எனப்படும். மீன் பாட்டம் என்பது வரி.

இவர்க்குப் பரதவர் என்னும் குடிப்பெயர் பரவையில் (கடலில்) செய்யும் தொழிலால் விளைந்த பெயர். பிற்காலத்தில் படகர் என்னும் பெயர் கடலில் சென்று ஓரளவில் கடலிலும் பெருமளவில் ஆறு குளங்களிலும் மீன் பிடிப்போர்க்கு வந்தது.

தென்னிந்தியக் குலங்களையும் குடிகளையும் ஆராய்ந்த ஐரோப் பிய அறிஞர் எட்கார் தாஃச்டன் என்பார் இவர்களை நாட்டுக்குள் பக்டர், பரக்தார், பக்டா (30) என்றெல்லாம் கண்டுள்ளார். வலை கொண்டு மீன் பிடிப்பதுடன் உள்நாட்டில் ஈட்டியால் குத்தியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/337&oldid=585218" இலிருந்து மீள்விக்கப்பட்டது