பக்கம்:நாகப்பட்டினம்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 - நாகபட்டினம்

பூம்புகார் உலகப் புகழ் பெற்றிருந்த காலத்தில் அந்நகர்க்கு வருவோர் பெரும்பாலும் இலங்கை வந்தே வந்தனர். அசோக மன்னனால் அனுப்பப்பெற்று இலங்கையில் புத்தத்தைப் பரப்பிய அவன் மகன் மகேந்திரன் அந்நாட்டு மன்னனையே புத்தமதத்தவ னாக்கினான். அது நழுவாது இன்றும் அரச மதமாகத் திகழ்கிறது. தென்னாட்டில் புத்த சமயத்தார் இருந்ததைவிட இலங்கையிலேயே அதிக அளவில் முழுப் பிடிப்போடு வாழ்ந்தனர். அடுத்துச் சோழநாட்டில் பூம்புகாரில் அன்னார் உறைந்தனர். அடிக்கடி இலங்கைக்கும் புத்தத் துறவியர் பயணம் நிகழ்ந்தது. வெளிநாட்டார் பயணமும் நிகழ்ந்தது. நாகையின் பழைய பெயராகிய பதரி திட்டாவை அறிமுகம் செய்யும் சாசன வமிசம் "சிங்களத் தீவின் அண்மையில் உள்ள தமிழ்நாட்டு பதரி திட்ட என்ற தொடர் இலங்கையைக் குறித்தே அடையாளம் சொல்கிறது.

எனவே இலங்கையிலிருந்து பூம்புகார் வந்த மிக முற்காலப் புத்தத் துறவியர் பரவை’ எனும் சிற்றுாரின் கடல் எல்லை நீர்ச்சூழலில் சிக்கி ஊறுபாட்டால் கரையேறி உள்ளனர்.கரையேறிய இடம் பெரும் ஊராக இன்றிப் பரதவ மக்கள் வாழும் இடமாக அமைதிச் சூழலில் இருந்ததைக் கண்டனர். தனிமைப் பாதுகாப்பாக அங்கிருந்த இலந்தை செறிந்த மேட்டு நிலத்தைத் தேர்ந்து, உறைந்து அதனை ஒரு புத்தக்களமாகத் திகழ்வித்தனர். இவ்வாறு கொள்வது இயல்புப் பொருத்தமானதாகும்.

உ. வரலாற்று நிகழ்வுக் கற்கள்

எனவே, ஒரு ஊறுபாட்டில் உருவான இடமே பதரி திட்டா. இதன்படி இதன் காலத்தை அசோகர் காலத்திற்கு முன்னர் - ஏறத்தாழ நோக்கினால் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டளவில்’ கொள்ளலாம். இதனை நாகைக் களத்தின் வரலாற்றுத் தொன்மையாகக் கொள்ள வேண்டும். இக்கால எல்லையாக வரலாற்றின் முதற்கல்லை நாட்டலாம். நாட்டினாலும் அம்முதற்கல் இறுகி நிற்காது. காலத்தில் கி.மு. வை முன்னோக்கி அசைந்தே காட்டுவதாகும். இது நாகர்பட்டினத்தின் வரலாற்றுக் கல்.

1. "nங்கள தீபஸ்வ சமீபே

டமிளாரட்டே படரதித்த யிறெ"

2. புத்தர் நிறைவு பெற்ற கி.மு. 483இற்கு அண்மைப் பிற்காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/34&oldid=584916" இலிருந்து மீள்விக்கப்பட்டது