பக்கம்:நாகப்பட்டினம்.pdf/347

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 329 எனவே, நாகை குறிக்கத்தக்க சிறப்புக்களில் கற்றார் நிறைந்து பயின்றதும் ஒன்றாகும்.

புத்தத் துறவியர் அமர்ந்த பதரி திட்டையில் புத்த சமய ஆய்வு செய்தனர். புத்த நூல்களுக்கு உரை எழுதினர். புதிய நூல்களைப் படைத்தனர். நூல் 'அட்டபகரணம் என்பதற்கு உரை என்ற பொருளில் "நிட்டகதா" என்று எழுதப் பெற்றது. தன்மபாலதேவர், காசபதேவர் முதலியோர் பல நூல்களைப் படைத்தனர்; ஆய்வு செய்தனர். வெளிப்பகுதியிலிருந்து அமைதியாக எழுதுவதற்கும் பயில்வதற்கும் வந்தது புத்தம் கற்றவர் பலர். எனவே, புத்த சமய அளவிலும் கற்றார் நாகையில் பயின்றனர். வெளிநாட்டுச் சீனரும் இங்குப் புத்த வளாகத்தில் உறைந்து யோகம் பயின்றதை அறிந்தோம்.

புத்த சமயக் கற்றவர் நாகையில் பயின்றாலும் அவர்தம் பயிற்சி நூல்களும், அன்னார் வடித்த நூல்களும் தமிழில் இல்லை. பெரும்பகுதி பாளி மொழியிலும், ஓரளவு வடமொழியிலும் அமைந்தன. இக்கற்றவர் பயில்வால் தமிழ்மக்களோ, நாகை மக்களோ, தமிழோ எப்பயனும் பெறவில்லை. எத்துணையும் பெறவில்லை. புத்தத் துறவியராம் கற்றவர் பயின்றனர் என்று கூறிக்கொள்ளலாம். சங்க மகள் நாகையார்

நாகன் என்னும் தமிழ் நாகநாட்டார் புலவர்களாய்த் தமிழகத்தில் சங்க காலத்தில் இருந்து பாடினர். சங்க இலக்கியங்களில் நாகன், அவன் மகன் நாகன் போத்தன் என்னும் புலவர்களை முன்னரும் கண்டோம்.

சங்கப் புலவர் மற்றொருவர் பெயர் நம் கவனத்தை ஈர்க்கிறது. அப்பெயரில் "நாகை" என்னும் ஊர்ப்பெயர் அமைந்திருப்பதே அந்த ஈர்ப்புக்குக் காரணமாகும்.

நாகை என்று தமிழகத்தில் சில ஊர்கள் உள்ளன. அற்றில் இவர் எந்த ஊராகவும் இருக்கலாம்; நம் நாகையாவும் இருக்கலாம். இவர் ஒரு பெண்பாற்புலவர். குறுந்தொகையில் இரண்டு பாடல்களாக (us. 225) മുഖ് பாடல்கள் உள்ளன. இரண்டும் அகத்துறைப் பாடல்கள். காதல் தலைவி ஒருத்தி காதலனைப் பிரியும் போதும், பிரிந்த பின்னர் அவன் வருகையை எதிர் பார்த்தும் பாடப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/347&oldid=585228" இலிருந்து மீள்விக்கப்பட்டது