பக்கம்:நாகப்பட்டினம்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 Ö நாகபட்டினம்

பெற்றவை. முன் (118) பாடல் கடற்கரை நிலத்து நெய்தல் திணைப்பாடல்: இதில் இவ்வம்மையார் அறிவிக்கும் ஒரு செய்தி தமழர்தம் விருந்தோம்பும் மரபை அறிவிக்கின்றது.

எங்கும் கோட்டை வாயில்கள் பலர் புகுமாறு பெரிய வாயில்களாக இருந்தன. அரண்மனை வாயிலும், செல்வர் இல்லத்து வாயிலும் பலர் புகுமாறு அகன்ற வாயில்களாக இருக்கும். அதனால் இவற்றைப் பலர் புகு வாயில் என்பர். அவ்வாயில் வழி வெளி நாட்டாரும், வெளியாரும் புகலாம். காவலர் புலனறிந்து வரவேற்கத் தக்காரை வரவேற்பர். இதுபோன்றே அரண்மனை வாயிலிலும் செல்வர் இல்ல வாயிலிலும் காப்பாளராக உள்ளோர் வரவேற்பர். இது பொதுச் செய்தி. இரவு நேரத்தில் கதவுகளை அடைக்கும்போது வருவோரை அறிந்து உசாவுபவன் கடவுநன் எனப்பெறுவான். கதவை அடைக்கும்போது அந்தக் கடவுவோன் வாயிலில் வந்து நின்று இன்னும் (விருந்தினர், வெளிநாட்டார்) உள்ளே வர வேண்டியவர் உள்ளனரோ என்று வினாவி (கடவி) விட்டுத்தான் கதவை அடைப்பான். இஃதொரு சிறப்பான வாழ்வியல் பண்பு. இதனைப் புலவர் நன்னாகையார், -

"பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளிரோ" (6) என்று பாடியுள்ளார். இஃதொரு தமிழர்தம் வாழ்வியல் மரபு. இஃதைப் பாடிய "நாகையார்" நினைவிற்குரியவர்.

நெய்தல் தினையில் பாடியுள்ளதால் இவர் நெய்தல் நிலத் தவராக - நாகையராக இருக்கலாம் என்று கொள்ளலாம். ஆனால் மலைநிலத்துக் குரிய குறிஞ்சித் திணையிலும் ஒரு பாடல் பாடியுள்ளார்.

அவ்வாறாயினும் பெயரில் நாகைநகர்ப் பெயர் அமைந் திருப்பது கற்பவர்க்கு ஒர் உவகை தருவதாகும். இப்புலமை மகளிர் நாகையராக அமர்ந்தாகக் கொண்டு மகிழலாம்.

ஆ. இடைக்காலக் கற்றவர் பின்னர் நாம் அறிவது ஏழாம் நூற்றாண்டில் அப்பரும், ஆளுடைப் பிள்ளையும் பாடிய நாகையில் கற்றவர் பயின்றதைத் தான். அவர்கள் நாகையில் கண்டு பாடியுள்ளதுபோல் பலர் சிறந்துள்ளனர் என்று கொள்ளலாம். குறித்துச் சொல்லச் சான்று கள் கிடைக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/348&oldid=585229" இலிருந்து மீள்விக்கப்பட்டது