பக்கம்:நாகப்பட்டினம்.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.35

இ. பிற்காலக் கற்றவர் கால வரிசையில் இங்கே ஒரு புலவர் பட்டியலைத் தர வேண்டும்.

இயற்றமிழ் ஆசிரியர்

நாகையில் 19, 20ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதியினரைக் காண்கின்றோம். கற்றவராகவும் புலவராகவும் பலரை அறிகின்றோம். w -

இவர்களில் முதல்வராக நாகை இயற்றமிழாசிரியர் திரு வே. நாராயணசாமி பிள்ளை காட்சி தருகிறார். "இயற்றமிழ் ஆசிரியர்" என்னும் அடைமொழியே இவர் இலக்கண இலக்கியங்களில் தேர்ந்த திறனாளர் என்பதை அறிவிக்கிறது.

நாகை யாதவத் தெரு என்னும் கடைத்தெருவின் முற்பகுதியில் புத்தகக்கடை வைத்திருந்த சிறு வாணிபப் புலவர் இவர். புத்தகம் வாங்க வருவோர் அவற்றைப் புரட்டிப் படிக்கவும் உதவுவர். ஐயம் கேட்போருக்கு அதனைத் தீர்த்து அறிவு கொளுத்துபவராகக் கற்றவர் ஆக்கினார்.

மனோன்மணியம் காப்பியத்தை வடித்த பேராசிரியர் திரு பெ. சுந்தரம் பிள்ளையவர்கள் திருவனந்தபுரத்திலிருந்து நாகை வந்து இயற்றமிழாசிரியர்பால் ஐயம் தீர்ந்து கற்றவர். மறையாத தமிழ் மலை (1876 - 1950)

அடுத்துக் குறிக்கத்தக்கவர் மறைமலை அடிகளார். வேதாசலம் என்னும் இயற்பெயர் கொண்ட இவர் காடவர்கோன்பாடியில் வாழ்ந்த அறுவை மருத்துவர் திரு சொக்கலிங்கம் பிள்ளையின் மகனார். அவரின் காதற் கிழத்தியாக நாகை யாதவத் தெருவிலிருந்த சின்னம்மையாரால் ஈன்றெடுக்கப்பெற்றவர். பிறந்த நாள் 15.7.1876. நாகையில் அப்போதிருந்த வெசுலிமிசன் பள்ளியில் (இப்போது தென்னிந்தியத் திருச்சபை மேனிலைப்பள்ளி) பயின்றவர். பயிலும் போது தமிழும், ஆங்கிலமும் வடமொழியும் கற்றவர். எதிரிலிருந்த புத்தகக் கடைக்குச் சென்று இயற்றமிழாசிரி யரின் ஆசிரியம் கொண்டு புலமை நிறைத்துக்கொண்டார். சைவ சித்தாந்த நூல்களையும், வடமொழி நான்மறைகளையும் கற்றுத் தேர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/354&oldid=585235" இலிருந்து மீள்விக்கப்பட்டது