பக்கம்:நாகப்பட்டினம்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 337

பின்னர் சென்னை சென்று கிறித்துவக் கல்லூரியில் பேராசிரியராக அமர்ந்தார். பொது நிலைக்கழகம் என்று பல்லாவரத்தில் துவங்கி, பலதுறை நூல்களாக 65 நூல்களைப் படைத்தார். செந்தமிழ் வடமொழி கலப்பதால் நேரும் தாழ்வையும் தூய்மைக்கேட்டையும் உணர்ந்து தனித்தமிழ் இயக்கம கண்டார். தம் பெயரை மறைமலைஅடிகள் (சுவாமி - அடிகள்; வேதம் - மறை; அசலம் - மலை) என்றாக்கிக் கொண்டார்.

இதன் முன் நாகை வேதாசலம் என்று தம் நூல்களிலும் கட்டுரைகளிலும் தம் ஊராம் நாகையைக் குறித்துகொண்டார்.

தனித்தமிழ் ஊற்றமும் தமிழ் மரபின் ஏற்றமும் சைவத்தில் பகுத்தறிவின் தேற்றமும் கொண்டவர். சொற்பொழிவு உலகுக்கு மிடுக்கும் பெருமிதமும் கவர்ச்சியும் வழங்கியவர். ஆரியரின் வேண்டாத செயல்களை வெளிப்படுத்தியவர். இந்தி பொதுமொழியாதலை எதிர்த்தவர்.

நாகைக்கு மட்டுமன்றித் தமிழகத்திற்கே ஒரு தமிழ்மலை. தமிழகத்திற்கு மட்டும் அன்றித் தமிழ் வழங்கும் உலகுக்கெல்லாம் திருவள்ளுவர் ஆண்டைக் கண்டு வழங்கிய பெருமகனார்.

மலைச்சிலை

இத்தமிழ் மலையை மறையாத மலையாக நாகைப் பெருமக்கள் முழு உருவ வெண்கலச் சிலையை நாட்டியுள்ளமை கண்டோம். அடிகளார் பிறந்த யாதவத் தெருவின் இடத்திலேயே இச்சிலை நாட்டப்பெற்றது. -

இவ்வழகுச் சிலை திருவள்ளுவர் ஆண்டு 2000 இல் ஆனி 5 இற்கு நேரான 19.6.1969இல் நாட்டப்பட்டது. நாகைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் அமைந்த குழுவில் தவத் திரு குன்றக் குடி அடிகளார் தலைமையில் யான்

「5『T.2.3.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/355&oldid=585236" இலிருந்து மீள்விக்கப்பட்டது