பக்கம்:நாகப்பட்டினம்.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 339

"நிறை தமிழ்ச் செம்மல்

மறைமலை அடிகளார்

பிறந்த நகரம்" என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் பொறிக்கப் பெற்ற பாளம் நிலை நாட்டப் பெற்றுள்ளது. இதனைப் பற்றி ஒரு குறிப்பைத் தர வேண்டும்.

நாகைப் புகைவண்டிநிலையக் கலந்தாய்வுக் குழு உறுப்பின. ராக யான் இருந்த போது இவ்வாறமைக்க ஒரு தீர்மானம் நிறை வேற்றப்பட்டு அறிவிப்புப் பலகையும் செய்யப்பட்டது. 4 அடி நீளம் 11/2 அடி அகலத்தில் மரச்சட்டத்தில் அடித்த தகட்டில் எழுதப்பட்டதாக அமைக்கப்பட்டது. இஃது கடனுக்குச் செய்யப்பட்டதாகக் காட்டிற்று. இதனை உருவாக்கிய அத்துறைப் பொறியாளரின் பரந்த மனத்தை இது வெளிப்படுத்தியது. அப்போது தென்பகுதிப் புகைவண்டித் துறைப் பொது மேலாளராகத் திருச்சிராப்பள்ளியில் திரு.கோபால தேசிகன் என்பார் இருந்தார். இச்சூழலில் நாகைக்கு வந்திருந்தார். அவருடன் உரையாடிய போது இவ்வறிவிப்புப் பலகை பற்றி விக்ாக்கம் கேட்டு அதனைப் பார்த்தார். அதனால் மனம் நிறைவடையாத அவர் ஒன்றும் சொல்ல முடியாமல் தாம் வந்த தனி மெருகு வண்டிக்குப் போய் என்னை அழைத்து வருந்தி உரையாடினார். அதனை வாய்ப்பாகக் கொண்டு, "இதனை நாட்டித் திறக்கத் தங்களைத்தான் அழைக்கப் போகிறேன். இதனை நாட்ட முனைந்தவனும் நானே. நாட்டப்பட்ட பிறகு 100 தமிழார்வலருடன் வந்து உடைக்க இருப்பவனும் நானே" என்றேன். கேட்டு வருத்தப் புன்னகை கொண்ட அவர் உடன் பொறியாளரை அழைத்து என்னைக் காட்டி, "இவர் சொல்வது போல் அதனை மாற்றிச் செய்க" என்றார். அவ்வாறே செய்யப்பட்டுப் புகை வண்டி நிலையத்தில் அதனை நாட்டிய விழாவில் அன்றைய மாவட்ட அறமன்றத் தலைவராக இருந்தவரும் இப்போது சென்னை உயர்அறமன்றத்து நடுவர் செம்மலாக (Justice) உள்ளவருமான மாண்பமை சனார்த்தனம் அவர்கள் தலைமையில் திருமிகு கோபால தேசிகன் அவர்கள் திறந்து வைத்தார்கள். அப்பெருமகனார் இன்றும் நன்றியுடன் குறிக்கத்தக்கவர்.

அன்று இரவு நாகைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நிகழ்ந்த இலக் கியக் கூட்டத்தில் சென்னை உயர் அறமன்றத் தலைமை நடுவராக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/357&oldid=585238" இலிருந்து மீள்விக்கப்பட்டது