பக்கம்:நாகப்பட்டினம்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

341

ஈ. 300 ஆண்டுகளில்

18 ஆம் நூற்றாண்டு முதல் 20ஆம் நூற்றாண்டு வரை வாழ்ந்த புலவர்கள் மிகப் பலர். சிதறலாகக் கிடைக்கும் புலவர் பெருமக்கள் இங்குத் தொகுக்கப்பெறுகின்றனர். இவர் நீளும் பட்டியலில் அமைபவராபொ.

சைவ, திருமாலிய, இசுலாமிய, கிறித்துவ, ஐரோப்பியப் புலவர்களை இப்பட்டியலில் காண்போம். மகளிர் பங்கில் ஒர் அம்மையாரும் உள்ளார். திருமண் இட்டோர் -

திருமாலியப் புலமைத் திருவினர் பலர் நாகையில் இருந்து நூல்கள் படைத்தனர். நாகை வெளிப்பாளையத்தைச் சேர்ந்த திரு ஐ. முத்துக்கிருட்டின பிள்ளை ஆழ்வார் இராமானுசதாசர் என்னும் திருமாலியப் பெயர் கொண்டவர். பக்தாம்ருத மஞ்சரி படைத்தவர். வெளிவை ஆழ்வார்தாசர் வேங்கடேசதாசர், நாகைப் பெருமான் மீது தசாவதாரப் பதிகம் பாடிய திரு நா. சுப்பராயபிள்ளை, வெளிவை திருவாசுதேவநாயுடு, பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றிய திருபுருடோத்தமநாயுடு.திரு குமரகுரு ஆசாரி ஆகியோர் நெற்றியில் திருமண் இட்ட புலவர்கள். புலமைத் திறத்தர்

நாகையில் வாழ்ந்த யாழ்ப்பாணம் திரு முத்துத் தம்பியா பிள்ளை குறிப்பிடத்தக்கவர். குறிப்பிடத்தக்க அபிதான கோசம், நன்னூல் இலகுபோதம்', 'தென்மொழி வரலாறு' என்னும் மூன்று அரிய நூல்களைப் படைத்தவர். குடமூக்கைச் சேர்ந்தவராக நாகையில் வாழ்ந்த பள்ளி ஆசிரியர் திருக்குடந்தை திரு சபாபதியாபிள்ளை. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் பெரியநாயகி யம்மன் பதிகம் பாடினார்.

தென்னிந்தியத் திருச்சபை உயர் நிலைப்பள்ளியில் பணி யாற்றிய வடமொழிப்புலவர் திரு ச. சக்ரபாணி ஐயர் கணிகஞானி ஒரு சம்வாதம் எழுதினார். இப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணி புரிந்த திரு முத்துச்சாமி ஐயர் தேர்ந்த புலவர். (இப்பள்ளியில் யான் 29 ஆண்டுகள் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றினேன்.)

நாகை நாட்டுயர்நிலைப்பள்ளியில் பணியாற்றிய திரு முத்துராம பாரதி, இப்பள்ளியில் பணியாற்றிய, நாகை நான்மணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/359&oldid=585240" இலிருந்து மீள்விக்கப்பட்டது