பக்கம்:நாகப்பட்டினம்.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 நாகபட்டினம்

மாலை படைத்த திரு சா. சாமிநாத பிள்ளை, இந்நூற்குப் பாராட்டுப்பா நல்கிய சைவப் பெரியார் செந்தமிழ் ஆசான் என்று போற்றப்பட்ட திரு சோ.ம.தெ.முத்துக்காயாரோகணம் செட்டியர் இசுலாமியப் புலவராகிய திரு கிருது. முகம்மது மரக்கலவரைய 'அட்டநாகபந்தம் எழுதினார். திரு சீமான் பிள்ளை ஒரு புலமை வணிகர். இவர் சென்னை இதழான "மகர விகட தூதனின் நாரை முகவர். நாகையில் கோயில் குருக்களாகப் பணியாற்றிய திரு வி. பிச்சுக் குருக்கள் கருந்தடங் கண்ணியம்மை ஆடிப்பூர ஓடப்பாட்டு எழுதினார். மகளிர் உலக அம்மையாராகத் திருமதி நாகலட்சுமி அம்மாள் நீலாயதாட்சியம்மன் நவரத்தினமாலை பாடினார். திரு மாணிக்கக் கவிராயர் என்பார் ஒரு நாகைப் புலவர்.

இந்நாட்டார் மட்டும் தமிழ்ப் புலவரோ? இதோ ஐரோப்பியன் யானும் தமிழ்ப் புலவனே என்று தலை உயர்த்தியவர் மறைத்திரு ஏல்வைன் ஐயர் தென்னிந்தியத் திருச்சபைத் தலைவர்.

இவ்வாறமைந்த புலவர் பலரின் வரலாறுகளைக் குறித்துக் காட்டும் நூலாகிய கோயில் வரலாறு' என்னும் நூலைப் பாடியதிரு இராம். சிங்காரவேலுப் பத்தர் என்பார் நாகை அக்கரைக்குளம் செர்க்கநாகர் மீது இந்நூலைப் பாடினார். -

நாகையை அடுத்த உரத்துாரில் ஒர் அந்தணப் புலவர் இவ்ாழ்ந்துள்ளார். அவரிடம் தொண்டை நாட்டு அனதாரி என்பவர் தமிழ் கற்று மதுரைச் சுந்தர பாண்டியன் வரலாற்றைச் "சுந்தரபாண்டியம்' என்னும் பெருநூலாகப் பாடினார். தண்ணிலப்பாடி திரு நடராசுப்பிள்ளை திருவிளையாடற்புராணச் சொற்பொழிவில் சிறந்த புலவராவார். கீழ்வேளுரில் வாழ்ந்த திரு சுப்பிரமணிய தேசிகர் அரிய நிகண்டு நூலொன்றை எழுதினார்.

"மிருச்சகடிகம்" என்னும் வடமொழி நாடக நூலை நாகை வழக் கறிஞர் திரு பாலகிருட்டிண ஐயர் என்பார் தமிழில் மொழி பெயர்த் தார். இவர் வடமொழியிலும், ஆங்கிலத்திலும் புலமை பெற்றவர்.'

திருமாலியப் புலவர்கள் தொடக்கமாக இதுவரை காட்டப்பெற்ற புல்வர் விவரங்கள் நாகைத்தமிழ்ச் சங்கத்து வெளியீடாகிய 'மறைமலையடிகளார் நினைவு மலரில் நாகைத் தமிழறிஞர் திரு இரா. ஆதிகேசவனார் எழுதிய நாகைப் புலவர் வரலாறு என்னும் கட்டுரை யிலிருந்து தொகுக்கப்பட்டவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/360&oldid=585241" இலிருந்து மீள்விக்கப்பட்டது