பக்கம்:நாகப்பட்டினம்.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும்நாகை - 345

அரங்கேற்ற்ம்

இக்குறிப்பை இங்குத் தரும் அளவில் திறனோடு அமைந்த நூல் திருநாகை காரோணப் புராணம். இது 61 படலங்களில் 2506 பாடல்களைக் கொண்டது. இந்நூல் அரங்கேற்றம் 1869 பிப்ரவரியில் நிகழ்ந்தது. அரங்கேற்றத்திற்கு முன்னரே இந்நூல் அச்சேறியது. அரங்கேற்றம் தொடர்ந்து ஓராண்டு நிகழ்ந்தது. காரோணர் முத்தி மண்டபத்தில் புலவர் மணிகள் சூழ நிகழ்ந்தது. கற்றவர்பயில் நாகையாயிற்றே; இடையிடையே சுவைத்துப் பாராட்டியோருடன், ஐயம் எழுப்பியோரும், மறுத்துப் பேசியோரும் இருந்தனர். அனைவரும் அமைதியும் உவகையும் பெருமிதமும் கொள்ளுமாறு நூல் அரங்கேறியது.

இவ்வரங்கேற்றத்தின்போது நாகைக்கு வருகை தந்திருந்த காஞ்சி சங்கரமடத்துத் தலைவர் அருள்மிகு சங்கராச்சாரியார் அவர்கள் பிள்ளையவர்களை அழைத்துப் பாராட்டினார்கள்.

திரு அப்பாத்துரைப் பிள்ளையவர்கள் இப்பணியில் முனைந்து நின்று நிறைவின்போது யானை மேல் நூலை எடுத்துச்சென்று பிள்ளையவர்களைப் பாராட்டிக் காணிக்கைகளும் வழங்கினார்.

கற்றார் பெற்ற நாகைக்குக் கற்றார் போற்றும் பெருநூல் கிடைத்தது. -- நாகையில் பாரதியார் -

கற்றவர் பயிலும் நாகை உற்றவரும், கற்றவரும் வருகை தந்த பெருமையையும் பெற்றது. அவ்வாறு வந்தாரால் வெளிப்படும் செய்திகள் பல. அவற்றுள் சிறந்த ஒன்று:

நாகை பெற்ற பேறான அது கவி மாமன்னன் பாரதியார் நாகைக்கு வந்து சில நாள்கள் தங்கியதும் அப்போது அவர் ஒரு வாய்ப்புப்பெற்றதுமாகும். தாம் நாகைக்கு வந்ததைத் தம் அறுபத் தாறில் பாரதியாரே பாடியுள்ளார். "அன்றொருநாள் புதுவைநகர் தனிலே கீர்த்தி

அடைக்க லம்சேர் ஈசுவரன் தர்ம ராஜா என்றபெயர் வீதியிலோர் சிறிய வீட்டில்

இராசாரா மையனெனும் நாகைப் பார்ப்பான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/363&oldid=585244" இலிருந்து மீள்விக்கப்பட்டது