பக்கம்:நாகப்பட்டினம்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 நாகபட்டினம்

கிழார். திருமாலிய நூல்களில் ஈடுபாட்டுடன் தேர்ந்தவர். இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவர். நினைவாற்றல் மிக்க கருத்தாளர். நாகைக் கோயில்களில் வரலாற்றைத் தனித் தனிச் சிறு சிறு நூல்களாக எழுதியுள்ளார். புலமைப் பட்டம் பெறாத பெரும்புலவர். ஆன்று அவிந்து அடங்கியுள்ள சான்றோராக நாகைப் பெருமாள் வடக்கு வீதியில் வாழ்ந்து வருகிறார்.

ஏற்றுமதி இறக்குமதி வணிகராக நாகை முதற் கடற்கரைச் சாலையில் வணிக நிறுவனம் அமைத்துள்ள கவிஞர் இப்னு சமாலுத்தீன் என்னும் இசுலாமியத் திருவாளர் கவிதையாற்றல் மிக்கவர். தமிழ் நூல்களின்படிந்தவர். இசுலாமிய சமயத் தோய்வில் சூழ்ந்த நெறியானவர். இப்னு சமாலுத்தீன் கவிதைகள்' என்றொரு தொகுப்பை வெளியிட்டுள்ளார். என்பால் பேரன்புடன் பாராட்டுப்பா பெற்றுப் பதிப்பித்துள்ளார்.

தென்னிந்தியத் திருச்சபை மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி ஒய்வுபெற்ற புலவர் இரா. இராசு அவர்கள் தேர்ந்து தெளிந்த புலமை யர். எச்செயலையும் அமர்வுடன் ஆரச் செய்பவர். என் அணுக்க நண்பராக நாகைத் தமிழ்ச் சங்கப் பணிகளில் தம்மை ஊன்றியவர். துங்கிய நாகைத் தமிழ்ச் சங்கத்தைத் தட்டி எழுப்பிப் புதுப்பித் துள்ளார். அதன் சார்பில் திருக்குறள் வகுப்பு நடத்தி வருகின்றார். அவர்க்கு உறுதுணையாகத் தமிழ் மருத்துவமறிந்த புலவர் இரா. இராமதாசு அவர்கள் (அந்தணப்பேட்டை) பணியாற்றுகிறார். புலவர் இராசு அவர்கள் திறன்மிக்க ஆசிரியர்: உரன்கொண்ட பகுத்தறிவாளர். நல்லோர் நெஞ்சில் நிற்கும் நண்பர். வெண்பாவை ஆற்றோட்டமாக எழுதும் புலமையர். நாகை இளஞ்சேரன் நகரில் வாழ்கிறார்.

நாகை நாட்டுயர் மேனிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுற்ற கவிஞர் மீனவன் சிறந்த கவிஞர். "கொஞ்சும் குழந்தை" முதலாகப் பல கவிதை நூல்களை எழுதி வெளியிட்டவர். நாராயணசாமி என்னும் இயற்பெயரினர். கவிதைக்குப் பாராட்டுக்கள் பெற்றவர். நாகை ஆரிய நாட்டுச் செட்டித் தெருவில் வாழ்கிறார்.

நாகை நீலா தெற்கு வீதியில் சிறு பெட்டிக்கடை வைத்து வாணிபம் நடத்தும் திரு ப. சிங்காரவேலன் அவர்கள் எளிமைக்குச் -ான்றானவர். நல்ல எழுத்தாளர். நாகையிலும் சுற்றுப்புறத்திலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/368&oldid=585249" இலிருந்து மீள்விக்கப்பட்டது