பக்கம்:நாகப்பட்டினம்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்றவர் பயிலும் நாகை 351

உள்ள கோயில்களின் வரலாறுகளைத் தினமணி சுடரில் தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியவர். பழகற்கினிய பண்பாளர்.

"புத்தகப்பித்தன்" என்னும் புனை பெயர் கொண்டுள்ள திரு தோ. ந. வீரராகவன் அவர்கள் நல்ல எழுத்தாளர். சில நூல்களை எழுதியுள்ளார். தாரா அச்சகம்’ என்னும் அச்சகம் நிறுவி அச்சுத் தொழிலராக உள்ள்வர். இமயப் பதிப்பகம் என்னும் பதிப்பகத் தையும் அவர் செல்வன் வழி குமரிப்பதிப்பகத்தையும் நிறுவிப் பல நல்ல நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருபவர். இதனால் இமயமும் குமரியும் கொண்டவர். இப்பணியை 4 ஆண்டுகளாகத் திறம்படச் செய்து வருகிறார். -

இதுவரை இங்குப் பதியப் பெற்ற நாகைக் கற்றவர் வரலாறு ஏறத்தாழ 300 காலக் கட்டம் கொண்டது. மேலும் அறியப்படாமல் பல கற்றாரை நாகை பெற்றிருக்கலாம், அடைந்திருக்கலாம். பயன் பெற்றிருக்கலாம். அவர்களை என் மனக்கண்ணால் நெஞ்சில் நிறுத்திப் பாராட்டி வணங்கி மகிழ்கின்றேன். --

இவ்வாறு அறியக் கூடாது போனவர் பலர். 'அத்தகைய கற்றவரையும் பெற்று நாகை தமிழ் மணம் கமழ்ந்ததை வைத்துத்தான் சிறுவன் "தமிழ் மணக்கும் நல்நாகை" என்றான்.

உ. தமிழ்ச் சங்க நாகை தனிமலர்களாகப் புலவர்கள் தமிழ் மணம் பரப்பினர்; மலர்க் கொத்தாகவும் தமிழ் மணம் பரப்பினர். அக்கொத்தாம் தமிழ் மன்றங்களும், கழகங்களும் சங்கங்களும் நாகையில் திகழ்ந்தன: திகழ்கின்றன. - -

நூல்களைக் கற்று ஆய்ந்தோர் கூட்டம் - குழுவாக அமைந்து முத்தமிழ் வளர்த்ததை வருணகுலாதித்தன் மடலில்,

"கணக்காயர் கூட்டமும் முத்தமிழின் கோதாட்டும்" (15) என்றும் "பன்னும் வளநாகை'பதி". (16) என்றும் பாடியுள்ளார். சுந்தரர் "கலை விளையாடும் பெருங்கூட்டங்க"ளைக் கண்டுள்ளார். வருணகுலாதித்தனால் நாகையில் தமிழ்ச் சங்கம் அமைந் திருந்தது. அதுகொண்டு கவித்திருமதி காளிமுத்து அம்மையார்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/369&oldid=585250" இலிருந்து மீள்விக்கப்பட்டது