பக்கம்:நாகப்பட்டினம்.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

352 நாகபட்டினம்

"சங்கம் திகழ் நாகை" என்று பாடினார்.

பிள்ளையவர்களும்

"கழக இடம் கரை இலவாம் நாக நகர்" என்றார்.

இவ்வாறு இந்நூற்றாண்டிலும் சங்கங்கள் அமைந்து நாகையைத் தமிழ் நாகையாக்கின: கற்றவரைப் பயில வைத்துக் "கற்றவர் பயில் நாகை"யும் ஆக்கின. சைவத் தமிழ் நிலையங்கள்

1940 ஆண்டளவில் நாகைத் தமிழ்ச் சங்கம் ஒன்று அமைந்து தமிழ் வளர்த்தது. மருத்துவப் புலவர் திரு. ப.மு. சொக்கலிங்கனார் அதன் செயலாளராகப் பணியாற்றினார். முத்தமிழ்க் காவலர் கி.ஆ. பெ. விக்வநாதன் அவர்கள் வருகை தந்து சொற்பொழிவாற்ற தொடர்ந்து பெரியபுராணம் படிக்கப் பெற்றுள்ளது.

காரோணர் கோயிலுக்குள் முத்து மண்டபத்தில் அவ்வப்போது சமயச் சான்றோர் கூடி சைவத்துடன் தமிழ் வளர்த்தனர்: அம்மண்டபத்தில் இசைப்பாங்குப் புலமைத்திரு அருணாசலக் கவிராயர் அவர்களின் இராமநாடக கீர்த்தனம் அரங்கேறியுள்ளது.

தேவாரத் திருக்கூட்டத்தினர் என்னும் குழுவினர் சைவத்திரு சொ. வீரப்ப செட்டியார் தலைமையில் தேவாரமும், சைவமும், தமிழும் போற்றினர். நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் ஒரு சைவ சபை நிறுவிப் பொழிவுகள் வழங்கியதுடன் சைவப் புலமையேறு சோமசுந்தர நாயகரை அழைத்துப் பொழிவு நிகழ்த்தினார்.

அரசு அலுவலராக இருந்த மதுரைப்பிள்ளை சைவ சிந்தாந்த சபையை வெளிவையில் நிறுவி அதற்கென ஒரில்லமும் உருவாக் கினார். இன்றும் நின்று திகழ்கிறது. தமிழ்ப்புரவலர் பாண்டித்துரை தேவரின் துணையைப்பெற்றது. மும்முறை மறைமலையடிகளாரை அழைத்து மிகச்சிறப்பாகப் போற்றிப் பயன் கொண்டது. இப்போதும் நாகை அறமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற புலவர் திரு. வி.என். இராசகோபாலபிள்ளை ஆர்வமுடன் செயலாற்றி வருகிறார். -

வார வழிபாட்டு மன்றம் அமைந்து கிழமைதோறும் போற்றிச் செய்தது. திரு உத்தண்டி செட்டியார் தலைவராகவும் திரு நமசிவாயம் பிள்ளை செயலாளராகவும் பணியாற்றினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாகப்பட்டினம்.pdf/370&oldid=585251" இலிருந்து மீள்விக்கப்பட்டது